• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 5 ரூபாய் ,10 ரூபாய் காயின் இருக்கா பாஸ்.. 10 லட்சம் சம்பாதிக்கலாம் - விவரம் உள்ளே

5 ரூபாய் ,10 ரூபாய் காயின் இருக்கா பாஸ்.. 10 லட்சம் சம்பாதிக்கலாம் - விவரம் உள்ளே

நாணயம்

நாணயம்

சர்வதேச சந்தையில் பழைய பொருள்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. பழைய பொருள்களை பொக்கிஷங்களாக பாதுகாக்கின்றனர்.

  • Share this:
    பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கா.. அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாணயங்களில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை குறிக்கும் வண்ணம் சில நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கும். சிலர் அதனை சாதாரணமாக கடந்துவிடுவர். சிலரோ இந்த மாதிரி நாணயங்கள் எல்லாம் கிடைக்காது என பத்திரப்படுத்துவார்கள். நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதுபோன்ற நாணயங்களை எளிதில் கடந்து போக மாட்டார்கள். சர்வதேச சந்தையில் பழைய பொருள்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. பழைய பொருள்களை பொக்கிஷங்களாக பாதுகாக்கின்றனர்.

    Also Read:  2 ரூபாய் இருக்கா பாஸ்.. 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. கண்டிஷன் இதுதான் விவரம் உள்ளே

    இதோ மேட்டருக்கு வருவோம். வைஷ்ணோ தேவியின் புகைப்படத்துடன் கூடிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் உங்களிடம் இருந்தால் இந்த குவாரண்டைன் காலத்தில் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம். இந்த நாணயங்களுக்கு பதிலாக நீங்கள் 10 லட்சம் வரை பணம் பெறலாம். இந்து மத நம்பிக்கையாளர்கள் வைஷ்ணோ தேவி படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அதிர்ஷ்டமானது எனக் கருதுகின்றனர். இதன்காரணமாகவே இந்த நாணயங்களுக்கு இவ்வளவு மவுசு. இந்த நாணயங்களை 2002 ஆம் ஆண்டில் அரசாங்கம் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என்கிட்ட இந்த காசு இருக்குங்க 10 லட்சம் யார் கொடுப்பாங்க..

    உங்களிடம் இந்த நாணயங்கள் இருந்தால் indiamart.com என்ற இணையதளத்தில் நீங்கள் முதலில் உங்களை விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் நாணயத்தின் இருபுறத்தின் புகைப்படத்தையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதன் பின்னர், இதை வாங்க விரும்புவோர் தாங்கள் இதற்கு கொடுக்க விரும்பும் பணத்தை ஏலத்தில் கூறுவார்கள். மிக அதிக பணம் கொடுக்கும் நபருக்கு நீங்கள் இந்த நாணயத்தை விற்கலாம்..

    இதேபோல், பிரிட்டிஷ் ஆட்சியின் போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அவற்றின் மூலமும் நீங்கள் நல்ல லாபம் ஈட்டலாம். அந்த காலத்து நோட்டுகளில் அசோக சக்கரம் அச்சிடப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு நோட்டுக்கு ஈடாக 20-25 ஆயிரம் ரூபாய் பெற முடியும். உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷடம் இருந்தா இந்த குவாரண்டைனில் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம் பாஸ். ஆல் தி பெஸ்ட்.

    பழைய நாணயங்களை விற்பனை தளங்களில் பதிவிட்டு விற்கும்போது, சில மோசடி நபர்கள் அழைப்பை மேற்கொண்டு ஏமாற்றுவதாக அறிகிறோம். எனவே, அது குறித்து விழிப்பாக இருக்கவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: