ஹோம் /நியூஸ் /வணிகம் /

தொடரும் lay off படலம்..200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ஓலா நிறுவனம்

தொடரும் lay off படலம்..200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ஓலா நிறுவனம்

ஓலா ஆட்குறைப்பு நடவடிக்கை

ஓலா ஆட்குறைப்பு நடவடிக்கை

டெக் மற்றும் ப்ராடக்ட் அணியில் வேலை செய்யும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

சமீப காலமாகவே பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிந்தைய தாக்கங்கள், ரஷ்யா-உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஆகியவை சர்வதேச நாடுகளை பொருளாதாரா மந்தநிலைக்கு தள்ளியுள்ளது.

மைக்ரோசாப்ட்,ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட MNC நிறுவனங்கள் தொடங்கி, இந்தியாவிலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதன் நீட்சியாக ஓலா நிறுவனமும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி வாகன போக்குவரத்து நிறுவனமான ஓலா தனது டெக் மற்றும் ப்ராடக்ட் அணியில் வேலை செய்யும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. ஓலா கேப்ஸ், ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஓலா நிதி சேவை ஆகியவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள் இந்த பணி நீக்கம் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்து வேலைத் திறனை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஓலா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுத் துறைகளில் 10,402 எஸ்சி/எஸ்டி காலிப்பணியிடங்கள்: 3 மாதங்களில் நிரப்ப அறிவுறுத்தல்

2021ஆம் ஆண்டு நிதியாண்டில் ஓலா நிறுவனம் ரூ.689.61 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 65 சதவீதம் குறைவாகும். 2021 ஆண்டில் ரூ.610.18 கோடி இழப்பை சந்தித்த ஓலா நிறுவனம் 2022 ஆண்டில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியிருந்தது.

சமீபத்தில் அமேசான் நிறுவனமும் 18,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. அதன் பேரில் இந்தியாவில் மட்டும் சுமார் 1,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலையை விட்டு வெளியேறிய ஊழியர்களுக்கு 5 மாத Severance Pay தொகையை அமேசான் வழங்கியுள்ளது.

First published:

Tags: Job, Ola