• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் பைப்பை தாக்கிய டிரோன்கள்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் பைப்பை தாக்கிய டிரோன்கள்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?

கோப்பு படம்

கோப்பு படம்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை 1.42 சதவீதம் உயர்ந்து பேரல் 71.24 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 1.20 சதவீதம் உயர்ந்து 61.78 டாலர் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சவுதி அரசு நிறுவனத்திற்குச் சொந்தமான கச்சா எண்ணெய் பைப்பை டிரோன்கள் தாக்கியதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமாக சவுதியின் ஆரம்கோ உள்ளது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான கச்சா எண்ணெய் பைப் லைன்களை ஆள் இல்லா டிரோன்கள் தாக்கியுள்ளன.

    இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதித்து, விலை ஏறும் நிலை உருவாகியுள்ளது என்றும், இன்றைய கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

    அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்ததிலிருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே இந்திய உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் தேவையைத் தீர்க்கும் பணிகளில் சவுதி உள்ளது.

    இந்நிலையில் சவுதி அரசுக்குச் சொந்தமான ஆரம்கோ நிறுவனம் கச்சா எண்ணெய் பைப் லைன் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    மறுபக்கம் இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இந்த விலை ஏற்றம் சந்தையின் தேவையை பொறுத்தே மாறியுள்ளது என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

    பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை 1.42 சதவீதம் உயர்ந்து பேரல் 71.24 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 1.20 சதவீதம் உயர்ந்து 61.78 டாலர் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: