Home /News /business /

ரஷ்யாவின் மீதான தடை; 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயரக்கூடும்

ரஷ்யாவின் மீதான தடை; 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயரக்கூடும்

எண்ணெய் விலை

எண்ணெய் விலை

அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் ரஷ்ய நாட்டுக்கு தடை விதிப்பதைப் பற்றி விவாதிப்பதாகக் கூறியதை அடுத்து, விலையேற்றம் காணப்படுகிறது என்று BBC செய்தி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதுமே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பற்றி தான் பேசிவருகிறது. இது வரை இல்லாத அளவுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எண்ணெய் விலையைப் பொறுத்தவரை,2008 ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடும் போது, விலை மிகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் ரஷ்ய நாட்டுக்கு தடை விதிப்பதைப் பற்றி விவாதிப்பதாகக் கூறியதை அடுத்து, இந்த விலையேற்றம் காணப்படுகிறது என்று BBC செய்தி தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் வணிகத்தில் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்ய நாடு இருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதால், ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன. பல நாடுகளும் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை துண்டித்து விட்டன. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த காரணத்தால், ரஷ்யாவின் வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அத்துடன், முன்னணி கரன்சிகளில் ரஷ்யா நாட்டுப் பணத்தின் மூலம் வணிகம் செய்யும் திறனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அவர் அமல்படுத்திவிட்டார்.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் (ஓபெக்) கூட்டமைப்பு சார்பில் உற்பத்தியை பெருக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓபெக் கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டிருந்ததை விடவும், ஜனவரி மாதத்தில் குறைவான அளவே கச்சா எண்ணெய் உற்பத்தி ஆனதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | பழிக்குப்பழியாக அரங்கேறிய சம்பவம்.. நெல்லையில் ரவுடி வெட்டிக்கொலை
 

அது மட்டுமின்றி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகின்றது. ப்ரெண்ட் கச்சா, என்று கூறப்படும் உலகம் முழுவதுக்குமான எண்ணெய்யின் அளவுகோல் அடிப்படையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை $139 க்கு மேல் அதிகரித்து, பின்னர் $130க்குக் கீழே குறைந்தது என்று BBC செய்தி தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் மற்றும் வீட்டுக் கட்டணங்கள் உயரும் காரணத்தால், செலவினங்களின் அதிகரிக்கும் தாக்கத்தை ஏற்கனவே சாமானிய மக்கள் உணர்கிறார்கள். அது மட்டுமின்றி, கடந்த திங்களன்று ஆசியாவில் பங்குச் சந்தைகளும் சரிந்தன. குறிப்பாக, ஜப்பான் நாட்டின் நிக்கேய் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன என்று பங்கு சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | 100 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில்  10 ஆயிரம் அடிக்குக் கீழே மூழ்கிய கப்பல் கண்டுப்பிடிப்பு
 

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரான ஆண்டனி ஃபிளிங்கன், பைடன் நிர்வாகமும், அமெரிக்காவின் நட்பு நாடுகளும் ரஷ்ய எண்ணெய்க்கான விநியோகத் தடை குறித்து விவாதித்து வருவதாகக் கூறினார்.

பின்னர், அமெரிக்க சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதற்கான சட்டம் பற்றி சபை "ஆய்வு செய்து வருகிறது" என்றும், ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைனுக்கு இந்த வாரம் 10 பில்லியன் டாலர் உதவியை வழங்க இருப்பதாக காங்கிரஸ் உத்தேசித்துள்ளது என்றும் கூறினார்.

ALSO READ |  பூமிக்குள் புதைத்து நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்பனை..
 உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷ்ய மீதான எண்ணெய் தடை ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்றும் உலகப் பொருளாதாரத்திலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தி கூறுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: America

அடுத்த செய்தி