பேச்சுவார்த்தையில் சுமூகம் - ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல்

ஆனால், ஹைதராபாத் மற்றும் ராய்பூரில் எரிபொருள் வழங்கமாட்டோம் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் சுமூகம் - ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல்
ஏர் இந்தியா (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: September 5, 2019, 7:30 PM IST
  • Share this:
எண்ணெய் நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்ததால் இனி ஏர் இந்தியா விமானத்துக்கான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த எட்டு மாதங்களாக எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்ற புகார் உள்ளது. ஐஓசி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் பாக்கியால் கொச்சி, பூனேம் பாட்னா, ராஞ்சி மற்றும் மொஹாலி ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் சேவையை நிறுத்திவிட்டன.

பெட்ரோலிய நிறுவனங்களின் முடிவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. கடன் தொகைக்கு வட்டியும் விதிக்கப்படுவதால் நாளுக்குநாள் கடன் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஏர் இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு எரிபொருளுக்கான கட்டண விலையை செலுத்த வேண்டும்.


ஆனால், தற்போது 200 நாட்களுக்கு மேலாகியும் கடனை அடைக்க ஏர் இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்பதால் எரிபொருள் மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட ஆறு விமான நிலையங்களில் செயல்படும் ஏர் இந்தியா விமானங்கள் மொத்தமாக ஒரு நாளுக்கு 250 கிலோலிட்டர் எரிபொருளைப் பயன்படுத்துகின்றன.

கடுமையான நெருக்கடிக்குப் பின்னர் ஏர் இந்தியா மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எரிபொருள் வழங்கத் தொடங்குவோம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஹைதராபாத் மற்றும் ராய்பூரில் எரிபொருள் வழங்கமாட்டோம் என்றும் மறுத்துள்ளனர்.

மேலும் பார்க்க: ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது உணவு அமைச்சகம்!மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தில் நடப்பது என்ன?
First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்