Home /News /business /

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.! 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை.. விரைவில் வருகிறது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.! 

Payment

Payment

Bharat Bill Payment System | வெளிநாடு வாழ் இந்தியர்கள், இங்குள்ள தங்களது குடும்பத்திற்கு கல்வி மற்றும் பிற செலவுகளுக்கான பில் பேமெண்ட்களை செலுத்தும் விதமாக ரிசர்வ் பேங்க், ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (பிபிபிஎஸ்) என்ற முக்கியமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெற்று வந்த இந்திய நாணய கொள்கை குழுவின் ஆலோசனை கூட்டம் 6ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் கல்வி கட்டணம், கரண்ட் பில், வாட்டர் பில் உள்ளிட்ட பிற கட்டணங்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்த படியே செலுத்தக்கூடிய புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (பிபிபிஎஸ்) தற்போது இந்தியாவில் வசிக்கும் நபர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்திற்கு கல்வி மற்றும் மின்சாரம், தண்ணீர், டெலிகாம், கேஸ், டிடிஎச் உள்ளிட்ட பல யூடிலிட்டி கட்டணங்களை பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலமாக செலுத்தக்கூடிய வகையில் அதன் எல்லையை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிபிபிஎஸ் பிளாட்ஃபார்மில் உள்ள எந்தவொரு பில்லர்களின் பில்களையும் செலுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.



பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் என்றால் என்ன?

NPCI Bharat BillPay Ltd. (NBBL) நிறுவனத்திற்குச் சொந்தமான, தனது முழுகட்டிப்பாட்டில் இயக்கப்படும் ஒரு நிறுவனம் தான் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS). இந்திய குடிமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கரண்ட், தண்ணீர், கேஸ், டிடிஎச், டெலிபோன், செல்போன் உள்ளிட்ட சேவைக்கான கட்டணங்களை பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலம் செலுத்தலாம். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பில்லர்கள், அதாவது கட்டணம் வசூலிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்கு 8 கோடிக்கும் அதிகமான பரிவார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சேவையை இந்திய குடிமக்கள் மட்டுமே அனுபவித்து வந்த நிலையில், தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகவும் விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

Also Read : லோன் ஆப்களுக்கான புதிய வழிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கான பலன்கள்:

வெளிநாட்டில் இருந்து நேரடியாக பணம் பெறும் வகையில், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டத்தை மாற்றி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் குடும்பங்களில் வசித்து வரும் முதியவர்கள் அதிகமாக பயன்பெறுவார்கள். ஆன்லைன் பற்றி பெரிதாக அறிந்திடாத முதியவர்களுக்கான பில் பேமெண்ட்களை இனி கவலையில்லாமல் NRI-க்கள் தாங்களே நேரடியாக செலுத்த முடியும்.

Also Read : இனி கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கிகள்!

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டத்தில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நெறிமுறை மற்றும் இயங்குதளம் ஆகியவை என்ஆர்ஐக்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள், நம்பகமான பில் பேமெண்ட் முறை, சென்ட்ரலைஸ்டு வாடிக்கையாளர்குறை தீர்க்கும் மையம், மற்றும் யூடிலிட்டி பில்களை செலுத்துவதற்கான ஒரே மாதிரியான வாடிக்கையாளர் கட்டணம், எந்த நாட்டில் இருந்தாலும் இங்குள்ள குடும்பத்தினரின் கல்வி மற்றும் பிற கட்டணங்களை செலுத்தும் வசதி ஆகிய பல்வேறு அம்சங்களை அனுபவிக்க உள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Payment App, Reserve Bank of India

அடுத்த செய்தி