பணம் இல்லாத டிஜிட்டல் பரிமாற்றம் என்பது இன்றைக்கு மக்களிடம் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் கால்கடுக்க நிற்காமல் நொடியில் நம்முடைய பணத்தை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் சிறந்த வழியாக உள்ளது டிஜிட்டல் பண பரிவர்த்தனை. கூகுள் பே,போன் பே, என யுபிஐ பரிமாற்றத்தின் மூலம் பணத்தை எளிதில் அனுப்பக்கூடிய வசதியை நாம் பெற்றிருக்கிறோம். இந்தியர்கள் பணத்தை எளிதில் பரிமாற்றக்கூடிய அதே வேளையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் வருமானத்தைச் சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்காக உள்ள என்ஆர்ஐ மூலம் இதுவரை மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள்இங்குள்ள அதாவது இந்தியாவில் உள்ள எண்ணை வைத்து UPI மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து வந்தனர்.
இந்நிலையில் தான் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களைப் பயன்படுத்தி விரைவில் யுபிஐ மூலம் பண வரித்தனை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற உள்ளனர். இதன் படி, முதற்கட்டாக 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது யுபிஐ சேவைகளைப் பயன்டுத்திக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பின் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பைப் பெற உள்ளனர்.
இதுகுறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சர்வதேச எண்களைப் பயன்படுத்தி என்ஆர்ஐ, என்ஆர்ஓ கணக்குகளைத் திறந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதோடு இத்திட்டத்தை வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இனி வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்திய குடும்பங்கள், உள்ளூர் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் RUPay மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களிடையே கடந்த 6 ஆண்டுகளில், UPI மூலம் நடந்த பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது எனவும், கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு பண பரிவர்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து இந்திய பணமளிப்பு கவுன்சில் தலைவர் விஸ்வாஸ் படேல் கூறுகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது அவர்களுக்கு 'பணம் செலுத்துதல்/பணப்பரிமாற்றம் செய்யும் வசதி' போன்ற முக்கிய வசதிகள் இதன் மூலம் எளிதாக்கப்படும் எனதெரிவித்துள்ளார்.சர்வத்ரா டெக்னாலஜிஸ் நிறுவனர் எம்டி மந்தர் ஆகாஷே கூறுகையில், UPIயின் முக்கியமான பாதுகாப்பு அம்சமான சிம் பைண்டிங் இந்திய சிம் கார்டு போன்களில் மட்டுமே இருப்பதால், NRI களால் UPI நெட்வொர்க்கை அணுக முடியவில்லை.
இந்நிலையில் தான் இந்த அறிவிப்பு மிகவும் உதவியாக இருக்கும். எனவே"என்ஆர்ஐக்கள் தங்கள் சர்வதேச சிம்முடன் இணைக்கப்பட்ட தங்கள் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ கணக்குகளை யுபிஐயுடன் இணைக்க வேண்டும், மேலும் மற்ற இந்திய யுபிஐ பயனர்களைப் போலவே வணிகர் கட்டணம் மற்றும் பியர்-டு-பியர் பேமெண்ட்டுகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digital Transaction, Money, Online Transaction, UPI