Home /News /business /

தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு வரி விலக்கு உயர்வு! மத்திய பட்ஜெட்டில் சலுகை

தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு வரி விலக்கு உயர்வு! மத்திய பட்ஜெட்டில் சலுகை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்ற ஆண்டு மத்திய அமைச்சகம் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ள மொத்த பணத்தையும் திரும்பப்பெற்றாலும் 100 சதவீத வரி விலக்கை அளிக்க ஒப்புதல் அளித்தது.

  • News18
  • Last Updated :
    என்.பி.எஸ் என அழைக்கப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறும் போது பிடித்தம் செய்யப்படும் வரிக்கு பட்ஜெட் 2019-ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    2018-2019 நிதியாண்டில் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறும் போது 40 சதவீத பணத்தை மட்டுமே வரி விலக்குடன் பெற முடியும்.

    என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் அதிலிருந்து இடையில் முழுமையாக வெளியேற வேண்டும் என்றாலும் 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், 2019 பட்ஜெட்டில் இந்த 40 சதவீத வரி விலக்கை நிர்மலா சீதாராமன் 60 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு மத்திய அமைச்சகம் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ள மொத்த பணத்தையும் திரும்பப்பெற்றாலும் 100 சதவீத வரி விலக்கை அளிக்க ஒப்புதல் அளித்தது.

    ஆனால் இன்று வரை மத்திய அரசு அதை முழுமையாக நீக்கவில்லை. ஆனால் விரைவில் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை இடையில் வெளியில் எடுக்கும் போது 100 சதவீத வரி விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.

    அதற்கான ஒரு முன்னோட்டமே நடப்பு பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ள 60 சதவீத வரி விலக்கு என்று கூறலாம்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Budget 2019, Union Budget 2019

    அடுத்த செய்தி