Home /News /business /

அவசர தேவைக்கு கடன் கூட பெறலாம்.. மிகச் சிறந்த பென்சன் சேமிப்பு திட்டம் இதோ!

அவசர தேவைக்கு கடன் கூட பெறலாம்.. மிகச் சிறந்த பென்சன் சேமிப்பு திட்டம் இதோ!

பென்சன் திட்டம்

பென்சன் திட்டம்

நீங்கள் ஒரு புதிய தொழில் முயற்சியைத் தொடங்க திட்டமிட்டாலும் இந்த பணத்தை திரும்ப பெற என்.பி.எஸ் சேமிப்பு திட்டமானது உங்களை அனுமதிக்கிறது.

    தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது ஒரு வரையறுக்கப்பட்ட பங்களிப்பு கொண்ட ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். என்.பி.எஸ் சேமிப்பு திட்டமானது இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களும் போதுமான ஓய்வூதிய வருமானத்தை வழங்குவதற்கான நிலையான தீர்வைக் கண்டறிய வழி செய்கிறது. மேலும், இது மிகவும் பயனுள்ள ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். சிலருக்கு ஓய்வு பெறுவதற்கு முன்னரே என்.பி.எஸ் சேமிப்பு திட்டத்தில் சேமித்த பணத்தை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். இதற்கும் என்.பி.எஸ் திட்டத்தில் வழி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    பொதுவாக என்.பி.எஸ் சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒருவர் இரண்டு கணக்குகளை திறக்க முடியும். அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரு வகை அக்கவுண்ட்டை திறந்து கொள்ளலாம். அதன்படி, அடுக்கு-I என்பது முக்கிய, ஓய்வூதியக் கணக்கு என்று வகைப்படுத்தப்படுகிறது. சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, ஓய்வுபெறும் முன் இந்தக் கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேல் படிப்புக்காக வங்கிகளில் லோன் எடுக்க போறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

    எனவே, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு இந்த சேமிப்பு கணக்கில் உங்கள் சொந்த பங்களிப்புகளில் இருந்து 25 சதவீதத்தை நீங்கள் திரும்பப் பெறலாம். மேலும், குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே நீங்கள் இவ்வாறு செய்ய முடியும் என்று என்.பி.எஸ் சேமிப்பு அமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக நோய் சார்ந்த பிரச்சனைகளுக்கு, உடல் இயலாமை, கல்வி அல்லது குழந்தைகளின் திருமணத்திற்கு மற்றும் சொத்து வாங்குவதற்கு இது பொருந்துகிறது. அதே போன்று, நீங்கள் ஒரு புதிய தொழில் முயற்சியைத் தொடங்க திட்டமிட்டாலும் இந்த பணத்தை திரும்ப பெற என்.பி.எஸ் சேமிப்பு திட்டமானது உங்களை அனுமதிக்கிறது. அதன்படி, உங்களின் முதலீட்டின் முழு காலத்திலும் அதிகபட்சமாக மூன்று முறை சேமிப்பு பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவீர்கள்.

    முழுமையாக வெளியேற முடியுமா?

    என்.பி.எஸ் சேமிப்பு திட்டத்தில் இருந்து ஒருவர் முழுவதுமாக தன்னை வெளியேற நினைத்தாலும் அதற்கும் வழி உண்டு. ஆனால் இதில் சில நிபந்தனைகள் உண்டு. குறிப்பாக பத்து வருடங்கள் முடிப்பதற்கு முன் நீங்கள் அத்தகைய பணத்தை திரும்பப் பெற முடியாது. முன்கூட்டியே வெளியேறும் பட்சத்தில், உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள கார்பஸில் 20 சதவீதம் பணம் வரை மொத்த தொகையாக பெறலாம். கார்பஸில் 80 சதவீதத்தை, எம்பேனல் செய்யப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வருடாந்திரத் திட்டத்தை வாங்குவதற்கு கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.

    கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்!

    ஓய்வூதியத்திற்குப் பின், உங்களுக்கு 60 வயதை எட்டிய பிறகு, ஓய்வூதியம் வழங்க இந்த வருடாந்திரத் திட்டம் பயன்படுத்தப்படும். கணக்கில் உள்ள மொத்த கார்ப்பஸ் பணத்தில் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், என்.பி.எஸ் திட்டம் உங்களுக்கு மொத்தத் தொகையையும் செலுத்தும்.

    முழு தொகையையும் பெற முடியுமா?

    என்.பி.எஸ் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கியவர்கள் தங்களது 60 வயதை அடைந்தவுடன் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம். அதாவது, மொத்தத் தொகையாக 60 சதவிகிதம் வரை நீங்கள் திரும்பப் பெறலாம். இருப்பினும், மீதமுள்ள 40 சதவீதத்தை நீங்கள் கட்டாயமாக வருடாந்திரமாக மாற்ற வேண்டும். மேலும் கார்பஸ் தொகை ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், மொத்தத் தொகையும் உங்களுக்கு வழங்கப்படும்.

    மற்ற ஓய்வூதிய திட்டத்தை விடவும் என்.பி.எஸ் சேமிப்பு திட்டமானது உங்கள் ஓய்வூதிய காலத்தை பெரிதும் உதவ கூடிய ஒன்றாக இருக்கும். மேலும், உங்களின் பணி ஓய்வுக்குப் பின் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறவும் இது வழி செய்கிறது. ஒருவேளை என்.பி.எஸ் சேமிப்பு சந்தாதாரர் இறந்து விட்டால், அவரது நாமினிகள் மொத்த கார்பஸ் தொகையையும் திரும்பப் பெறலாம். அதே போன்று அந்த தொகையில் ஒரு பகுதியை வருடாந்திரமாகவும் மாற்றி கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pension Plan, Post Office, Savings

    அடுத்த செய்தி