ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்தியன் வங்கிக் கிளையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம்.!

இந்தியன் வங்கிக் கிளையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம்.!

Indian bank

Indian bank

Indian Bank | உங்களுக்கான இந்தியன் ஃபேங்க் கிளையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஃபோனில் இந்தியன் ஃபேங்க் மொபைல் ஃபேங்கிங் சேவை இருக்கிறது என்றால் அதன் மூலமாகவே இதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியன் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளரா நீங்கள்? உங்கள் ஹோம் பிராஞ்ச் என்னும் அக்கவுண்ட் வைத்துள்ள கிளையை மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா? தற்போதுள்ள கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் மீதான அதிருப்தி அல்லது உங்களுடைய பணியிடமாற்றம், வீட்டு குடிபெயர்ந்து செல்வது போன்ற காரணங்களால் நீங்கள் கிளையை மாற்றுவதற்கு திட்டமிடக் கூடும்.

  அந்த வகையில் உங்களுக்கான கிளையை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஃபோனில் இந்தியன் ஃபேங்க் மொபைல் ஃபேங்கிங் சேவை இருக்கிறது என்றால் அதன் மூலமாகவே இதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.

  ஆன்லைனில் உங்கள் அக்கவுண்ட்-ஐ மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?

  * இந்தியன் ஃபேங்க் மொபைல் ஃபேங்கிங் ஓப்பன் செய்து, லாகின் செய்து கொள்ளவும். அதில் உள்ள இ-சர்வீசஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.

  அடுத்த ஸ்கிரீனில் வரும் “சேஞ்ச் ஹோம் பிராஞ்ச்” என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும்.

  * இதற்கு அடுத்ததாக நீங்கள் மாற்றிக் கொள்ள விரும்பும் அக்கவுண்ட் நம்பரை தேர்வு செய்து, பின்னர் நீங்கள் விரும்பும் புதிய கிளையின் ஐஎஃப்சி கோட்-ஐ உள்ளிடவும். உங்கள் புதிய கிளைக்கான ஐஎஃப்சி கோட் டைப் செய்த பிறகு, உங்கள் புதிய கிளையின் கோட், முகவரி மற்றும் பெயரை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இப்போது சப்மிட் கொடுக்கவும்.

  * நீங்கள் தேர்வு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கன்ஃபார்ம் கொடுத்து, உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

  இப்போது அனைத்தும் நிறைவடைந்து விட்டது. புதிய கிளைக்கு உங்கள் அக்கவுண்ட்-ஐ மாற்றிக் கொள்ளும் கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. 15 முதல் 20 நாட்களில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றி கொடுக்கப்படும்.

  Also Read : இதுதான் சரியான நேரம்.. பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்!

  உண்மையை சரிபார்த்துக் கொள்ளலாம்..

  குறிப்பிட்ட கால வரம்புக்குள் உங்கள் அக்கவுண்ட், நீங்கள் தேர்வு செய்த கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். மொபைல் ஃபேங்கிங் சென்று உங்கள் அக்கவுண்ட் விவரங்களை சரிபார்க்கலாம்.

  மொபைல் ஃபேங்கிங் உள்ளே அக்கவுண்ட் என்ற மெனுவின் கீழ் அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் என்பதை தேர்வு செய்தால் உங்களுடைய புதிய வங்கிக் கிளை கோட், ஐஎஃப்சி கோட் மற்றும் கிளையின் பெயர் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

  Also Read : முதலீடு செய்தால் சிறந்த ஆதாயங்கள் தரும் 7 LIC பிளான்கள் இங்கே..!

  ஆக இந்த வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் உங்களுடைய வங்கிக் கிளையை விருப்பமான இடத்திற்கு ஆன்லைன் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். அதே சமயம், இந்த வசதியானது சேமிப்பு கணக்கு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

  Published by:Selvi M
  First published:

  Tags: Bank accounts, E Service, Indian Bank