முகப்பு /செய்தி /வணிகம் / கிரெடிட் கார்ட் மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் பணச் சலுகை... அசத்தல் திட்டம்

கிரெடிட் கார்ட் மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் பணச் சலுகை... அசத்தல் திட்டம்

மாதிரி படம்

மாதிரி படம்

லண்டனை சேர்ந்த பின்டெக் மற்றும் ரெட்ஜிராஃபி நிறுவனங்களின் வலைதளங்களில் கிரெடிட் கார்ட் மூலம் வீட்டு வாடகை செலுத்தினால், உங்களுக்கு பணச் சலுகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

  • Last Updated :

மாத சம்பளத்தை நம்பியிருக்கும் பெரும்பாலானோருக்கு பெரும் தலைவலியாக இருப்பது  வீட்டு வாடகை செலுத்துவது. வாங்கும் ஊதியத்தில் பெரும் தொகையை வாடகையாக செலுத்த வேண்டும் மற்றும் ஒரு வேளை ஊதியம் தாமதமாக வரும்பட்சத்தில் மற்றவர்களிடம் கடன்வாங்கி வீட்டு வாடகை செலுத்த வேண்டியிருக்கும். இதற்காகவே வாடகை வீட்டில் இருக்கக்கூடாது என்று நினைக்கும் பலர் உள்ளனர். 

இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ரெட் ஜிராஃபி நிறுவனம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கிரெடிட் கார்ட் மூலம் வீட்டு வாடகையை அந்த நிறுவனத்தின் வலைதளம் வழியாக செலுத்தினால் உங்களுக்கு ரிவார்ட் பாய்ண்டுகளும், ஈ-வவுச்சர்களையும் வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் இலவசமாக ஷாப்பிங் செய்யலாம். இதற்காக அந்த நிறுவனம் இந்திய வங்கிகளான ஹெச்.டி.எப்.சி. எஸ்.பி.ஐ, இண்டஸ்இன்ட், ஆக்சிஸ், கொடாக் மகேந்திரா ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரெட்ஜிராஃபி (RedGirraffe) வலைதளத்தில் பதிவு:

முதலில், www.redgirraffe.com  என்ற வலைதளத்துக்கு சென்று அங்கு கேட்கும் தகவல்களை பதிவிட்டு RG Property ID - ஐ உருவாக்க வேண்டும்.  பின்னர், RentPay பக்கத்தில் உங்களின் வாடகை விவரத்தையும், வீட்டு உரிமையாளரின் விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கு விவரமும் அளிக்க வேண்டும். இந்த பதிவு முடிந்த பின்னர்,  உங்கள் இமெயிலுக்கு விதிமுறைகள் அடங்கிய தகவல் அனுப்பப்படும். அனைத்து தகவல்களும் பதிவு செய்தபிறகு, நீங்கள் குறிபிடும் தேதியில் வீட்டு வாடகை உரிமையாளரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஆதார், பான்கார்டுகளுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மட்டுமே இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்யாத பயனர்கள் ரென்ட் பே இணையதளம் மூலம் வாடகை செலுத்த முடியாது.

Also read... திருமணத்தன்று ராணியைப் போல் ஜொலிக்க வேண்டுமா? அப்போ 1 மாதத்திற்கு முன்பே ’பிரைடல் ஸ்கின்கேர்’ ஃபாலோ பண்ணுங்க..!

 உங்களுக்கான பயன்கள் : 

ரெட்ஜிராஃபி இணையதளத்தை பயன்படுத்தி நீங்கள் வாடகை செலுத்தினால், 45 முதல் 60 நாள் வரையிலான கடன் வசதியை பெறுவீர்கள். ஒருவேளை கிரெடிட் கார்டை இந்த வலைதளத்தில் பயன்படுத்தி வாடகை செலுத்தினால் உங்களுக்கு அதற்கு இணையான reward புள்ளிகள் கிடைக்கும். 200 புள்ளிகளை சேர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கிஃப்ட், மற்றும் e vouchers வழங்கப்படுகிறது. மேலும், உங்களின் சிபில் ஸ்கோர் குறையாமல் இருப்பதற்கு இந்த தளத்தினை பயன்படுத்தி வாடகை செலுத்தலாம். லோன் வாங்கச் செல்லும்போது மற்றவர்களைக் காட்டிலும் உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்

ரெட் ஜிராஃபி சேவைக் கட்டணம்:

ரெட் ஜிராஃபி வலைதளத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் 39 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, கொடாக் மகேந்திரா, ஆக்சிஸ், இண்டஸ்இன்ட் ஆகிய வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 39 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், கூடுதல் வரிகளையும் சேர்த்து அதிகபட்சமாக 45 ரூபாய் வசூலிக்கப்படும். பொதுவாக 10 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டுமென்றால், கூடுதலாக 45 ரூபாய் சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். இந்த சேவைக் கட்டணம் எஸ்.பி.ஐ வங்கிக்கு பொருந்ததாது. எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 1.75% பணப்பரிமாற்றக் கட்டணம் மற்றும் இதர வரிகள் வசூலிக்கப்படும்.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Credit Card, Rented house