இனி சென்னையிலும் டீசல் ஹோம் டெலிவரி.. இந்தியன் ஆயில் அதிரடி!

டீசலை விட வேகமாகத் தீப்பற்றக்கூடியது பெட்ரோல். எனவே சோதனை முயற்சியாக டீசல் மட்டும் ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

news18
Updated: January 2, 2019, 9:12 PM IST
இனி சென்னையிலும் டீசல் ஹோம் டெலிவரி.. இந்தியன் ஆயில் அதிரடி!
சென்னையிலும் டீசல் ஹோம் டெலிவரி!
news18
Updated: January 2, 2019, 9:12 PM IST
சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் புனே மற்றும் மகாராஷ்டிராவில் டீசல் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்கியது. தற்போது இந்தச் சேவையை சென்னையிலும் தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல் நிலையங்களில் உள்ளது போன்ற டீசல் விநியோகிக்கும் இயந்திரங்கள் டேங்கர் லாரிகளில் பயன்படுத்தப்படுகிறது. டீசல் மட்டும் ஹோம் டெலிவரி செய்யப்படுவதால் வணிக வாகனங்கள் பெருமளவில் இந்தச் சேவையைப் பெற்று பயன்பெறுவார்கள்.

அதே நேரம் குறைந்தது 200 லிட்டர் டீசல் ஆர்டரை அளிக்கும்போது மட்டுமே ஹோம் டெலிவரி செய்யப்படும். இதுவே 2,500 லிட்டருக்கும் அதிகமாக ஹோம் டெலிவரி செய்ய வேண்டும் எனில் பெட்ரோலிய மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து உரிமம் பெற்று இருக்க வேண்டும்.


டீசலை விட வேகமாகத் தீப்பற்றக்கூடியது பெட்ரோல். எனவே சோதனை முயற்சியாக டீசல் மட்டுமே ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: விஜய் பாடலை தலைப்பாக்கும் சிவகார்த்திகேயன்! சினிமா18
First published: January 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...