• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்புக்கு பின் இன்றைய (நவம்பர் 4) விலை நிலவரம்!

பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்புக்கு பின் இன்றைய (நவம்பர் 4) விலை நிலவரம்!

Petrol diesel

Petrol diesel

கலால் வரியை அதிரடியாக குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுத் தந்திருக்கிறது.

  • Share this:
    தீபாவளி பண்டிகை பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 10 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், டீசல் விலை மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து இருப்பது, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சென்னையில் நேற்று 106.76 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இன்று 101.40 ரூபாயாக குறைந்திருக்கிறது. இதே போல நேற்று டீசல் விலை லிட்டருக்கு 102.69 ரூபாயாக இருந்தது, அது இன்று 11 ரூபாய் அளவுக்கு குறைந்து 91.43 ரூபாயாக குறைந்திருக்கிறது.

    கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சாதனை அளவுக்கு அதிகரித்து வந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் கலால் வரியை அதிரடியாக குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த சந்தோஷத்தையும், பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது.

    Also read:   14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…

    கர்நாடகாவில் பெட்ரோல் விலை குறைப்பு:

    மத்திய அரசை பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் 2100 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டாலும், பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். விலை குறைப்பு இன்று மாலை முதல் அமலுக்கு வருகிறது.

    Also read:  அமெரிக்காவை சேர்ந்த விலை குறைந்த கோவிட் ‘தடுப்பூசி’ இந்தியாவில் சோதனை!

    புதுவையில் அதிரடி குறைப்பு:

    புதுச்சேரி அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 7 ரூபாய் குறைத்துள்ளது.

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், புதுச்சேரி மாநில அரசு சார்பிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ஏழு ரூபாய் குறைத்துள்ளது. புதுச்சேரி அரசின் இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தகவல்...

    கர்நாடகாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 95.90 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 81.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை அங்கு 12 ரூபாய் குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: