பணம் இல்லாமல் காசோலை திரும்பினால் கிரிமினல் குற்றமாகாது - நிதி அமைச்சகத்தின் பரிந்துரைக்கு வங்கிகள் எதிர்ப்பு

வங்கியில் பணம் இல்லாமல், காசோலை திரும்பினால் அதை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்ற நிதி அமைச்சகத்தின் பரிந்துரைக்கு வங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பணம் இல்லாமல் காசோலை திரும்பினால் கிரிமினல் குற்றமாகாது - நிதி அமைச்சகத்தின் பரிந்துரைக்கு வங்கிகள் எதிர்ப்பு
கோப்புப் படம்
  • Share this:
காசோலை பணம் இல்லாமல் திரும்பும் போது அது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்காவிட்டால், வேண்டும் என்றே கடன் தவணையை செலுத்தாமல் விடுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என வங்கிகள் அச்சம் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க...

மனைவியின் அக்கா உடன் கள்ளத்தொடர்பு - ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை


தற்போது இருக்க கூடிய சட்டத்தின் படி, ஒருவர் வழங்கும் காசோலை பணம் இல்லாமல் திரும்பினால், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அந்த காசோலையின் மொத்த மதிப்பில் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும்.

இதனை தளர்த்த வேண்டும் என்று நிதி அமைச்சகம் வழங்கிய பரிந்துரைக்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading