கேஸ் சிலிண்டர் விலை ₹65 குறைப்பு

மாதிரிப் படம்

 • Share this:
  மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் 65 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலே எடை) விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேல் கூடுதலாக தேவைப்பட்டால் மானியமில்லாமல் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இந்நிலையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 65 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

  சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் ஏற்படும். அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் ரூ.64.50 பைசா குறைக்கப்பட்டு ரூ.761.50-க்கு விற்கப்பட உள்ளது.  கொல்கத்தாவில் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.65 குறைக்கப்பட்டு ரூ.774.50-க்கும், டெல்லியில் ரூ.744, மும்பையில் ரூ.714 விலையில் விற்கப்படுகிறது.  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: