சிகப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமற்ற பொருள்களை டெலிவரி செய்ய அனுமதி - அமேசான், ஸ்நாப்டீல் வரவேற்பு

இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே டெலிவரி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சிகப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமற்ற பொருள்களை டெலிவரி செய்ய அனுமதி - அமேசான், ஸ்நாப்டீல் வரவேற்பு
அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்
  • Share this:
சிகப்பு மண்டலப் பகுதிகளிலும் அத்தியாவசியமற்ற பொருள்களையும் டெலிவரி செய்வதற்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. பின்னர், மூன்றாம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வில் சிகப்பு மண்டலங்களைத் தவிர்த்த மற்ற பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருள்களையும் டெலிவரி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, நான்காம் கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், சிகப்பு மண்டலப் பகுதிகளிலும் அத்தியாவசியமற்ற பொருள்களை ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரி செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே டெலிவரி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தளர்வுகளுக்கு அமேசான், ஸ்நாப்டீல் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.









 

Also see:
First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading