நான் செய்தது மோசடியில்லை - நீரவ் மோடி புது விளக்கம்

அமலாக்கத் துறை நீரவ் மோடியை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 5, 2019, 8:16 PM IST
நான் செய்தது மோசடியில்லை - நீரவ் மோடி புது விளக்கம்
நீரவ் மோடி
Web Desk | news18
Updated: January 5, 2019, 8:16 PM IST
வங்கிகளில் முறைகேடாக வெளிநாட்டு உத்தரவாத கடன் பெற்றுவிட்டு தலைமறைவாக உள்ள நிரவ் மோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தான் மோசடி செய்யவில்லை, அது சிவில் பரிவர்த்தனை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத் துறை நீரவ் மோடியை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கிற்கு எதிராகப் பதில் தாக்கல் செய்த நீரவ் மோடி தரப்பு மோசடி என்று கூறுவது சரியல்ல, இது ஒரு சிவில் பரிவர்த்தனை. பொருளாதாரக் குற்றவாளி பிரிவில் இது வராது என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி என இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி உத்தரவாத கடனில் மோசடி செய்துள்ளனர். பல முறை சம்மன் அனுப்பியும் இருவரும் இந்தியா வரவில்லை. நீரவ் மோடி லண்டனில் இருக்கிறார் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால் அவரது மாமா மேஹூல் சொக்ஸி ஆண்டிகுவா தீவில் உள்ளார்.

மேஹூல் சோக்ஸியை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் தீவரமாக உள்ளனர். இதற்கிடையில் மேலும் நெருக்கடி தரும் விதமாகச் சர்வதேச காவல் துறை மேஹூல் சோக்ஸி மீது ரெட் கார்னர் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. இதனால் இனி மேஹூல் சோக்ஸியால் அண்டிகுவாவை விட்டு எங்கும் செல்ல முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

சென்ற மாதம் கடன் மீட்புத் தீர்ப்பாயம் நீர்வ் மோடி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 7,000 கோடி ரூபாயை மீட்பது குறித்த நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது.

மேலும் பார்க்க: வங்கத்தலைவி மம்தாவின் சோதனையும், சாதனையும்...
Loading...
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்