முகப்பு /செய்தி /வணிகம் / தங்கம் விற்பனை.. அடுத்த மாதம் முதல் வருகிறது புதிய கட்டுப்பாடு..!

தங்கம் விற்பனை.. அடுத்த மாதம் முதல் வருகிறது புதிய கட்டுப்பாடு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Hallmark Gold | பழைய ஹால்மார்க் நகைகள் விற்பனைக்கு இம்மாதம் 31-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவிப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது 'ஹால்மார்க்' தங்க நகைகளில், பி.ஐ.எஸ் இலச்சினை, தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் 916 என்ற எண், நகையை ஆய்வு செய்து மதிப்பீடு அளிக்கும் மையத்தின் இலச்சினை, குறிப்பிட்ட கடையின் இலச்சினை ஆகிய 4 அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Also Read: டெல்லி, மும்பை, பெங்களூருவில் ஒரு சதுர அடி இடத்தின் விலை இவ்வளவா? முழு விவரம்..!

இந்நிலையில், தங்க நகைகளுக்கு என்று 6 இலக்க 'ஹால்மார்க் தனித்த அடையாள எண்' கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு நகைக்கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள பழைய ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்வதற்கு சுமார் 21 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழைய ஹால்மார்க் நகைகள் விற்பனைக்கு இம்மாதம் 31ம் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 1-ம் தேதி முதல், பி.ஐ.எஸ். இலச்சினை, 916 எண்ணுடன் சேர்த்து 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய தங்க நகைகள் விற்பனைக்குத்தான் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹால்மார்க் இல்லாமல் தங்கம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபராதமும் அல்லது ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஹால்மார்க்கிற்கு 35 ரூபாய் கூடுதலாக செலவாகும். இதை நகை வாங்குவோர்தான் செலுத்த வேண்டியிருக்கும். அதேவேளையில் மக்கள் ஏற்கனவே வாங்கியுள்ள, 4 இலச்சினைகளுடன் கூடிய பழைய ஹால்மார்க் நகைகள் செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

First published:

Tags: Gold