முகப்பு /செய்தி /வணிகம் / ஊதிய உயர்வு இல்லை... ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்பு..!

ஊதிய உயர்வு இல்லை... ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்பு..!

ஃபிளிப்கார்ட்  நிறுவனம்

ஃபிளிப்கார்ட் நிறுவனம்

இந்த அறிவிப்பால் சுமார் 5000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின்னணு வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது 30 விழுக்காடு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மின்னஞ்சல் மூலம் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது. அதில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் ஊதிய உயர்வு இந்தாண்டு 70 விழுக்காடு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 30 விழுக்காடு ஊழியர்களுக்கு வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், சுமார் 5000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில், நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த ஆக்கத்தோடு பணி செய்ய வைப்பதை நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. கிரேடு 10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Appraisal, Flipkart, Salary hike, Yearly salary