முகப்பு /செய்தி /வணிகம் / தேசிய பென்ஷன் திட்டத்தை மாற்றும் திட்டமில்லை - மத்திய அரசு விளக்கம்

தேசிய பென்ஷன் திட்டத்தை மாற்றும் திட்டமில்லை - மத்திய அரசு விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2017-2018 நிதியாண்டில் மட்டும் ஓய்வூதியத்துக்காக 1,56,641.29 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய பென்ஷன் திட்டத்தை (என்பிஎஸ்) மாற்றி மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வரும் எண்ணமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2004-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் வருகின்றனர். இவர்களை மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றும் எண்ணம் ஏதுமில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா மக்களவையில் தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு சிவ பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: ஓய்வூதிய செலவுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. 2017-2018 நிதியாண்டில் மட்டும் ஓய்வூதியத்துக்காக 1,56,641.29 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டு முதல் அரசு வழங்கி வரும் என்பிஎஸ் பங்களிப்பை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்த உள்ளதால், கூடுதலாக 2,840 கோடி ரூபாய் செலவாகும். ஏற்கெனவே நிதி பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த கூடுதல் செலவினம் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: சட்டப்பேரவையில் துரைமுருகன் கண்ணீர்

First published:

Tags: National Pension Scheme, Pension Plan