முகப்பு /செய்தி /வணிகம் / ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டமில்லை, எந்த விவசாய நிலத்தையும் வாங்குவதாக இல்லை: தெளிவுபடுத்திய ரிலையன்ஸ் நிறுவனம்

ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டமில்லை, எந்த விவசாய நிலத்தையும் வாங்குவதாக இல்லை: தெளிவுபடுத்திய ரிலையன்ஸ் நிறுவனம்

விவசாயிகள்.

விவசாயிகள்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை, “குறைந்தபட்ச ஆதார விலை என்பதை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு எங்கள் சப்ளையர்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியிருக்கிறோம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டமும் இல்லை எந்த ஒரு விவசாய நிலத்தை வாங்கப்போவதும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதில் ரிலையன்ஸ் அக்கரை செலுத்தும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஒப்பந்த விவசாயத்திலும் ஈடுபடப்போவதில்லை அப்படி ஈடுபடும் எதிர்காலத் திட்டமும் இல்லை, எந்த நிலத்தையும் வாங்கவும் இல்லை என்று அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை, “குறைந்தபட்ச ஆதார விலை என்பதை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு எங்கள் சப்ளையர்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியிருக்கிறோம்.

குறைந்தப்பட்ச ஆதார விலை அல்லது அரசு நிர்ணயம் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் அளிக்கும் வேறு எந்த முறையிலும் விவசாயப் பொருட்களை வாங்கவே முடிவு செய்துள்ளோம்” என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெளிவுபடுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் மேலும் தன் அறிக்கையில், “விவசாயிகளிடமிருந்து நியாயமற்ற முறையில் லாபம் பெறும் வகையில் எந்த ஒரு நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்களையும் ரிலையன்ஸ் மேற்கொள்ளவில்லை. மேலும் சப்ளையர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைகளுக்கு வாங்குவதையும் நாங்கள் ஊக்குவிப்பதில்லை. ஒரு போதும் இப்படி செய்ய மாட்டோம்.” என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஒப்பந்த விவசாயத்தில் ரிலையன்ஸ் ஈடுபடப்போவதாகவும் புதிய விவசாயச்சட்டங்களின் பயன்களை ரிலையன்ஸ் முழுதும் அனுபவிப்பதாகவும் எழுந்த தவறான செய்திகளினால் ரிலையன்ஸ் ஜியோவுக்குச் சொந்தமான 1,500 மொபைல் கோபுரங்கள் தாக்கப்பட்டன. இது தொடர்பாக ஹரியாணா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் சில சுயநலமிகளும் வர்த்தகப் போட்டி நிறுவனங்களும் இருப்பதாக ரிலையன்ஸ் கருதுகிறது என்று அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது

கடந்த நவம்பரில் பஞ்சாபில் விவசாயக் குழுக்களில் சிலர் ரிலையன்ஸ் ஃபிரெஷ் ஸ்டோர்களை மூடினர். விவசாயச் சட்டங்களினால் விவசாயத்தை கார்ப்பரேட் அபகரிக்கும் என்று விவசாயிகளில் சிலர் அச்சமடைந்துள்ளனர்.

இதனையடுத்து நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 4ம் தேதியான இன்று அரசுக்கும் விவசாயிகளுக்கும் இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Farmers Protest Delhi, Reliance, Reliance Retail