முகப்பு /செய்தி /வணிகம் / ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றப்படுகிறதா - ரிசர்வ் வங்கி விளக்கம்

ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றப்படுகிறதா - ரிசர்வ் வங்கி விளக்கம்

இந்திய ரூபாய் நோட்டுகள்

இந்திய ரூபாய் நோட்டுகள்

ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த உள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கின.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் அண்ணல் காந்தியின் படத்துடன் ரவீந்திர நாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை பயன்படுத்த உள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சில ஊடகங்களில் தற்போதைய கரன்சி நோட்டில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யப் போகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கியின் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றி வேறு புகைப்படங்களை பயன்படுத்தப் போவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டன. ஆனால் ரிசர்வ் வங்கியிடம் இது போன்ற எந்த திட்டமும் இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுதந்திரம் பெற்ற 1947 காலத்தில் முதலில் பிரிட்டன் மன்னர் படத்தை மாற்றி சாரனாத் சிங்கங்களின் படம் சேர்க்கப்பட்டது. பின்னர் 1969ஆம் ஆண்டில் தான் முதல் முதலில் அண்ணல் காந்தியின் படம் ரூ.100 நோட்டில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1987ஆம் ஆண்டில் ரூ.500 நோட்டில் காந்தியின் படம் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டு. அன்றில் இருந்து காந்தியின் படம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது வருகிறது.அமெரிக்க டாலர் நோட்டுகளில் அந்நாட்டின் முன்னோடி தலைவர்களான ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்லின், தாமஸ் ஜெபர்சன், ஆன்ட்ரூ ஜாக்சன், ஆப்ரகாம் லிங்கன் உள்ளிட்டோரின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: தக்காளி, உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விலை ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிப்பு - காரணம் என்ன.?

அதேபோல் இந்தியாவிலும் வேறு தலைவர்களின் படங்கள் பயன்படுத்த வேண்டும் என அவ்வப்போது பேச்சு எழும். தற்போதும் இது போன்ற குழப்பம் எழுந்த நிலையில் இதற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக விளக்கம் தந்துள்ளது.

First published:

Tags: Mahatma Gandhi, RBI