3 வங்கிகள் இணைப்பால் யாரும் வேலை இழக்கமாட்டார்கள் - அருண் ஜேட்லி உறுதி

மூன்று வங்கிகள் இணைப்பால் யாரும் வேலை இழக்கமாட்டார்கள். கடன் மீதான செலவுகள் குறையும் என்றார் அருண் ஜேட்லி.

news18
Updated: January 4, 2019, 6:32 PM IST
3 வங்கிகள் இணைப்பால் யாரும் வேலை இழக்கமாட்டார்கள் - அருண் ஜேட்லி உறுதி
அருண் ஜெட்லி
news18
Updated: January 4, 2019, 6:32 PM IST
பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகள் இணைப்பால் யாரும் வேலையை இழக்கமாட்டார்கள் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மூன்று வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது, வங்கிகளின் நஷ்டம் அதிகரிக்கும் என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று நடந்த கேள்வி நேரத்தின்போது  விளக்கமளித்தார்.

“மூன்று வங்கிகள் இணைப்பால் யாரும் வேலை இழக்கமாட்டார்கள். இந்த இணைப்பால் எஸ்பிஐ வங்கியைப் போன்று பெரிய வங்கி உருவாகும். கடன் மீதான செலவுகள் குறையும்.

21 பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் 11 வங்கிகள் ஆர்பிஐ வங்கியின் சரிபார்ப்பு நடவடிக்கைக்குள் வருகின்றன. இந்த வங்கிகளில் அதிகளவில் வாராக் கடன் உள்ளதே இதற்கான காரணம்.

செயல்படா சொத்துக்களின் அளவு குறைக்கப்பட வேண்டும். வங்கி திவால் சட்டமான ஐபிசி 3 லட்சம் கோடி ரூபாயை திரும்பப் பெற உதவியுள்ளது. எஸ்பிஐ மற்றும் பிற பொதுத்துறை வங்கிகள் லாபத்துடன் தான் இயங்கி வருகின்றன. நஷ்டத்திற்குக் காரணம் வாராக்கடன். நடப்பு நிதி ஆண்டில் வங்கி மறுமூலதனமாக 2018 டிசம்பர் 31-ம் தேதி வரை 51,533 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

மேலும் பார்க்க: கேக்குக்காக கொலையா?... சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...