பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) க்கு இணங்க போலி ஆதாரங்களை சரி பார்க்க அவ்வப்போது ரிவ்யூ மற்றும் அப்டேட் செய்து வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் குறித்த பதிவுகளை துல்லியமாக வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, நூறு நாள் வேலை அட்டை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் மூலம் வழங்கப்பட்ட கடிதம் முதலானவை வங்கியின் KYC ஆவணங்களின் பட்டியலோடு பொருந்தவில்லை என்றால் புதிய KYC செயல்முறை தேவைப்படுகிறது.
அதேநேரம், KYC தகவலில் எந்த மாற்றமும் இல்லை என்றால், உங்களது மின்னஞ்சல் ஐடி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம்கள் அல்லது டிஜிட்டல் வழிகள் மூலம் ஒரு self-declaration -ஐ சமர்ப்பித்தால் போதும்.
அதேபோல் ஏற்கனவே செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டு, தங்கள் முகவரியை மாற்றாமல் இருந்தால், பழைய ஆவணங்களே போதுமானதாக இருக்கும். அதற்கு பிறகு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வங்கிகளும் அவர்களை இதற்காக வங்கிக்கு வரும்படி வலியுறுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
முகவரியில் மட்டும் மாற்றம் இருந்தால், வாடிக்கையாளர்கள் திருத்தப்பட்ட/புதுப்பிக்கப்பட்ட முகவரியை தகுந்த ஆதாரங்களுடன் மின்னஞ்சல், தொலைபேசி அல்லது இணையதளம் ஏதேனும் ஒன்றின் மூலம் சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்குள் புதிதாக சமர்ப்பித்த முகவரியை வங்கி சரிபார்த்து இணைத்துக்கொள்ளும்.
அதேபோல, முன்னர் சமர்ப்பித்த KYC ஆவணம் காலாவதியான சந்தர்ப்பங்களில் புதிய KYC செயல்முறை தேவைப்படுகிறது. புதிய KYC செயல்முறையை வங்கிக் கிளைக்குச் செல்வதன் மூலமோ அல்லது தொலைதூரத்தில் வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாளச் செயல்முறை (V-CIP) மூலமாகவோ (வங்கிகள் குறிப்பிட்ட இடங்களில்) செய்ய முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.