’பொதுமக்கள் பணத்துக்கு ஆபத்தில்லை... புரளிகளை நம்ப வேண்டாம்...’ - ரிசர்வ் வங்கி விளக்கம்

யெஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி, இந்தியன் வங்கி, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி, இண்டஸிண்ட் வங்கி ஆகிய வங்கிகளின் வர்த்தகம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

’பொதுமக்கள் பணத்துக்கு ஆபத்தில்லை... புரளிகளை நம்ப வேண்டாம்...’ - ரிசர்வ் வங்கி விளக்கம்
ரிசர்வ் வங்கி
  • News18
  • Last Updated: October 1, 2019, 8:01 PM IST
  • Share this:
இந்திய வங்கித்துறை பாதுகாப்பானதாகவும் ஸ்திரத்தன்மையுடனும் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியப் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜிடிபி வீழ்ச்சி, பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு என அடுத்தடுத்து மோசமான நிலையை இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

இன்று பங்குச்சந்தை அதளபாதாளத்தில் வீழ்ந்தது. குறிப்பாக அத்தனை முக்கிய வங்கிப் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளின் குழப்பமான மோசமான சூழலே வங்கித்துறை இன்று மோசமான சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், வங்கிகளின் வீழ்ச்சி பொதுமக்களின் பணத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற செய்தி பரவத் தொடங்கியது. ஆனால், “வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என எதற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. மக்கள் தேவையில்லாத புரளிகளை நம்ப வேண்டாம். இந்திய வங்கித்துறைக்கு வீழ்ச்சி இல்லை. மிகவும் பாதுகாப்பான, ஸ்திரமான அமைப்பைக் கொண்டதுதான் இந்திய வங்கித்துறை” என மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

யெஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி, இந்தியன் வங்கி, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி, இண்டஸிண்ட் வங்கி ஆகிய வங்கிகளின் வர்த்தகம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

மேலும் பார்க்க: தொடர் வீழ்ச்சியில் பங்குச்சந்தை வர்த்தகம்... மோசமான நிலையில் இந்தியப் பொருளாதாரம்!ரயில் நிலையங்களை சுத்தப்படுத்திய ஜியோ ஊழியர்கள்!
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading