கொரோனா வந்தாலும் வந்தது எல்லா ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வரப்பிரசாதம் கிடைத்தது.கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவு இல்லாததனால், பல்வேறு ஐடி கம்பெனிகள் அந்த கம்பெனியின் ஊழியர்களை மீண்டும் ஆபீஸ்க்கு வர வைத்து விட்டார்கள்.
அதேபோன்று ஒரு அறிவிப்பை தான் இப்போது டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் ( டிசிஎஸ் ) வெளியிட்டுள்ளது. 25X25 ( 25 ஸ்கொயர் ) மாடல் என்கிற ஒரு திட்டத்தை, தற்போது டி.சி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 25 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து மீதம் இருக்கும் ஊழியர்களை சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வரவைப்பது இதன் சாரம்சமாகும்.
ஒவ்வொரு ஐடி நிறுவனமும் இந்த ஹைபிரிட் மாடலை ஒவ்வொரு முறை பின்பற்றி வருகிறது.டெல்லியில் டிசிஎஸ் தலைமையகத்தில் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடும்போது சென்ற நவம்பர் 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், மேலும் வருங்காலத்தில் இந்தத் திட்டத்தை விரிவடைய செய்ய இருப்பதாகவும் கூறி இருக்கிறது அந்த நிறுவனம்.
பலருக்கு உள்ளபடியே வொர்க் இன் ஹோம் என்னும் அமைப்பு போரடித்து விட்டதாகவே கூறுகிறார்கள். நாங்கள் ஆபீசுக்கு எப்போது தான் வருவது, வாரம் இரண்டு மூன்று தடவையாவது அலுவலகத்திற்கு வருகிறோமே என்று கூடஊழியர்கள் விண்ணப்பித்தார்களாம். இதற்கு பதிலாக தான் டிசிஎஸ் நிறுவனம் இத்தகைய ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனம் என்ன கூறுகிறது என்றால் இந்த அறிவிப்பு முதலில் பணியாளர்களை அலுவலகத்திற்கு மீண்டும் வரவேற்கும், பிறகு நமக்கு ஏற்றது போல ஒரு ஹைபிரிட் மாடலை உருவாக்கிக் கொள்ள வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஹைபிரிட் முறை என்பது என்னவென்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டியது இருக்கும். அலுவலகத்துற்கு வரும் நாட்களின் எண்ணிக்கை, அவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து மாறுபடவும் செய்யும். சிலர் மாதம் ஒருமுறை மட்டுமே அலுவலகம் வர நேரும். சிலருக்கோ மாதம் 25 நாட்கள் கூட அலுவலகத்தில் வேலை இருக்கலாம்.
இது போல தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்களையும் மீண்டும் பணிக்கு வர வைத்துள்ளது அமெரிக்க தலைமையகம். அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல வீட்டில் உட்கார்ந்தபடி வேலை செய்ய முடியாது அல்லவா அதனால் தான் பல நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை பணிக்கு கூப்பிட்டுவிட்டு திரும்ப வேலைகளை கொடுத்து வீட்டில் போய் செய்யுங்கள் என்று கூறி வருகிறார்கள் போல.
நியூயார்க் போஸ்டில் வெளியான செய்தி ஒன்றில் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டின் கூக் " எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை குறைந்தது மாதம் 3 தடவை அலுவலகத்திற்கு வர சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்" இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.