Home /News /business /

"கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளது; மக்களும் தொடர்ந்து கடன் வாங்குகின்றனர்” - நிர்மலா சீதாராமன்

"கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளது; மக்களும் தொடர்ந்து கடன் வாங்குகின்றனர்” - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் பணப்புழக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகள் கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், அதேபோல் மக்களும் தொடர்ந்து கடன் வாங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சநதித்தார். அப்போது, இந்தியாவில், பணப்புழக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

தனியார் நிதி நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில், நிறைய நல்ல விஷயங்களையும், நேர்மறையான விஷயங்களையும் கேட்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

வங்கிகள் கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், அதேபோல் மக்களும் தொடர்ந்து கடன் வாங்கி வருவதாகவும் தெரிவித்தார். தற்போதைய நிலையில், பொருளாதார மந்தநிலை குறைந்துவிட்டதாகவே தெரிகிறது என்றும் வரவிருக்கும் பண்டிகை காலங்கள், பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.

 

Published by:Sankar
First published:

Tags: Nirmala Sitharaman

அடுத்த செய்தி