முகப்பு /செய்தி /வணிகம் / டேட்டா லிமிட்டே கிடையாது... எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்... BSNL-இன் அசத்தல் பிளான்!

டேட்டா லிமிட்டே கிடையாது... எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்... BSNL-இன் அசத்தல் பிளான்!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

தினசரி டேட்டா லிமிட், மாத லிமிட் கூட இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால் அது பெரிய ஆஃபர் தானே.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • CHENNAI |

மத்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் கீழ் சமீபகாலமாக பல தனித்துவமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல்  நிறுவனங்கள் தனது குறைந்த பட்ச ரீச்சார்ஜ்  பிளான் விலைகளை உயர்த்திய போது மாதம் 99 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் வேலிடிட்டி தரும் பிஎஸ்என்எல் பிளானை அறிமுகம் செய்தது.

அது போலவே தற்போது மற்றொரு அசத்தலான பிளானை கொண்டு வந்துள்ளது. அதன்படி மாதம் முழுக்க அளவே இல்லாமல் டேட்டா பயன்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. தினசரி டேட்டா லிமிட், மாத லிமிட் கூட இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால் அது பெரிய ஆஃபர் தானே.

இதையும் படிங்க:களத்தில் குதித்த பிஎஸ்என்எல்.. ரூ.99க்கு இவ்வளவு வசதிகளா.? BSNL அறிவித்த அசத்தல் ஆஃபர்!

அது போதாதென்று அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அழைப்புகள் இலவசம். தினமும் 100 எஸ்.எம்.எஸ் வேறு இலவசமாம்.   மேற்சொன்ன எல்லா அம்சங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனம்  Truly Unlimited STV 398 என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

பிஎஸ்என்எல்-ன் ரூ.398 ரீசார்ஜிற்கு போட்டியாக எந்த திட்டமும் இதுவரை இல்லை. அதாவது ரூ.398-ஐ போல ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டம் ரிலையன்ஸ் ஜியோவிடமும் ஏர்டெல்  நிறுவனத்திடமும் கூட இல்லை. ஆனால் வோடபோன் ஐடியாவிடம் (Vodafone Idea) உள்ளது. இருப்பினும் அது போஸ்ட்பெயிட் (Postpaid) சேவையின் கீழ்  உள்ளது.

பிஎஸ்என்எல்-ன் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி (Validity) மொத்தம் 30 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தின் கீழ் ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair usage policy - FUP) லிமிட் என்று எதுவும் கிடையாது. அதனால் மாதம் முழுக்க திகட்ட திகட்ட டேட்டாவை பயன்படுத்தலாம்.

ஒரே ஒரு குறை என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையை இன்னும் தொடங்கவில்லை.2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அன்லிமிடெட் டேட்டா வசதி இருந்தாலும்  இண்டநெட் ஸ்பீட் என்பது கொஞ்சம் சுமாராக இருக்கும். மிதமான வேகத்தில் இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டா என்பது பெரிய வரம் தானே.

First published:

Tags: BSNL, Recharge Plan