• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இதை செய்யாவிட்டால், பி.எஃப் பணம் கிடைக்காது... மாத ஊதியதாரர்கள் அவசியம் படிங்க.

இதை செய்யாவிட்டால், பி.எஃப் பணம் கிடைக்காது... மாத ஊதியதாரர்கள் அவசியம் படிங்க.

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் இந்த இணைப்பை மேற்கொள்ளாவிட்டால் பி.எஃப். கணக்கில் இருந்து முன்பணம் எடுப்பது உட்பட எந்த சேவையை பயன்படுத்த முடியாது.

  • Share this:
    ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும்.  ஓய்வு பெற்ற பின்னர், அவர்களுக்கு முழு தொகையும் வழங்கப்படும்.

    அதேவேளையில் ஊழியர்கள் தங்கள் பணியில் இருக்கும் போதே இந்த தொகையில் குறிப்பிட்ட அளவு வரை எடுக்க முடியும். தற்போது கொரோனா காலத்தில்  பி.எஃப். கணக்கில் இருந்து 2வது முறையாக முன்பணம் எடுக்கவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO) கடந்த ஜூன் 1ம் தேதி முதல் PF கணக்கின் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, அனைத்து கணக்குகளுடனும் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாகியுள்ளது. சமூக பாதுகாப்புக் குறியீட்டின் பிரிவு 142 ன் கீழ் இந்த இணைப்பு கட்டாயமாகும். இதற்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது.  கொரோனா தொற்று காரணமாக இந்த காலக் கெடு தற்போது செப்டம்பர் ஒன்றாம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்க: கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பில் டவுன்லோடு செய்வது எப்படி?


    அதற்குள், உங்கள் EPFO கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க தவறும் பட்சத்தில், EPFO-ன் எந்த ஒரு சேவையையும் உங்களால் பயன்படுத்த முடியாது என EPFO உத்தரவு வெளியிட்டுள்ளது. பி.எஃப். கணக்கில் இருந்து முன்பணம் எடுப்பது உட்பட எந்த சேவையை பயன்படுத்த முடியாது. எனவே, தொழிலாளர்களின் பி.எஃப். கணக்குடன்  அவர்களின் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று  EPFO அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: ஒரு நிமிடத்தில் ஆன்லைனில் Employment Renewal செய்வது எப்படி?


    EPFO ​​கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை வீட்டில் இருந்தவாறே இணைப்பது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

    * முதலில் பிஎப் தளமான Epfindia.gov.in அல்லது நேரடியாக https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

    *உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.

    * மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, E-KYC போர்ட்டலைக் கிளிக் செய்யவும்.

    * KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

    * ஆதார் எண் இல்லாத பட்சத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, OTP உருவாக்கப்படும் வரை காத்திருங்கள்.

    *உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் நிரப்பி OTP-ஐ சரிபார்க்கவும்.

    * உங்கள் ஆதார் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும். ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என எழுதப்பட்டு இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: