ஹோம் /நியூஸ் /வணிகம் /

No Cost EMI – வட்டியில்லாமல் தவணை முறையில் பொருட்கள் வாங்குகிறீர்களா? இந்த தகவல் உங்களுக்கே!

No Cost EMI – வட்டியில்லாமல் தவணை முறையில் பொருட்கள் வாங்குகிறீர்களா? இந்த தகவல் உங்களுக்கே!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

No Cost EMI | உண்மையிலேயே அதற்கு வட்டி எதுவும் கிடையாதா அல்லது வேறு ஏதேனும் மறைமுக கட்டணங்கள் உங்களுக்கு தெரியாமல் உங்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறதா என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தவணை முறையில் பொருட்கள் விற்பனை என்பது புதிது கிடையாது. இணைய விற்பனை, ஆன்லைன் ஷாப்பிங், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தோன்றுவதற்கு முன்னரே தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனை நடைபெற்றது. தவணை முறையில் பொருட்கள் வாங்கும் பொழுது மாதாந்திரம் ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி செலுத்துவோம்.

  அதுதான் தற்பொழுது ஈக்வேடட் மன்த்லி இன்ஸ்டால்மென்ட் என்று கூறப்படுகிறது. தற்போது ஈஎம்ஐயில் நீங்கள் பொருட்கள் வாங்கினால் கூட அதில் சிறப்பு சலுகையாக நோ காஸ்ட் ஈஎம்ஐ அதாவது வட்டி எதுவும் இல்லாமல், பொருளின் அசல் விலையைத்தான் நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும் என்று பல தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் உண்மையிலேயே அதற்கு வட்டி எதுவும் கிடையாதா அல்லது வேறு ஏதேனும் மறைமுக கட்டணங்கள் உங்களுக்கு தெரியாமல் உங்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறதா என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  நோ காஸ்ட் EMI இல் எப்படி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது?

  பல விதமான விருப்பங்களில் நுகர்வோர்களுக்கு நோ காஸ்ட் EMI இல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

  ஆனால், உண்மையிலேயே எவ்வாறு இப்படி மாதாந்திர தவணையில் வழங்கப்படும் பொருட்கள் மறைமுக கட்டணங்கள் வழங்கப்படுகிறது என்பதை பின்வரும் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

  Read More : டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

  நீங்கள் ஒரு வாஷிங் மெஷின் வாங்க விரும்புகிறீர்கள். நீங்க தேர்வு செய்த தயாரிப்புக்கு நோ-காஸ்ட் emi உடன் பல்வேறு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன் அசல் விலை ரூ. 20,000 என்றும், நீங்கள் ரொக்கமாக கேஷ்-ஆன் டெலிவரி அல்லது முழு தொகையை ஆன்லைன் பேமெண்ட் வழியாக செலுத்தி வாங்கினால், 10% தள்ளுபடியுடன் ரூ. 18,000/- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  நீங்கள் no-cost emi என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், பொருளின் தள்ளுபடி ரத்து ஆகும். உங்களுக்கு வாஷிங் மெஷினின் அசல் விலையில் தான் emi வழங்கப்படும். எனவே, நீங்கள் வாங்கும் பொருளின் விலைக்கு மொத்தமாக ரூ. 20,000/- செலுத்துவீர்கள். எனவே, நீங்கள் தள்ளுபடியை மறந்து விட வேண்டும்.

  அடுத்த உதாரணம், நோ-காஸ்ட் ஈஎம்ஐக்கான வட்டி விகிதம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், நீங்கள் வாங்கும் பொருளின் விலை ரூ. 5,000 ஆனால், நோ-காஸ்ட் ஈஎம்ஐ தேர்வு செய்தால், அதில் 12 மாதங்களுக்கு 20% வட்டியில் மாதம் ரூ. 1000 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, இந்த விருப்பத்தில் நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ. 500 வீதம், மொத்தமாக ரூ. 6000 செலுத்துவீர்கள்.

  மற்றொரு விருப்பத்தில், பொருளின் தொகை அப்படியே 12 மாதங்களுக்கு பிரிக்கப்பட்டு நீங்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டும். ஆனால், நோ-காஸ்ட் விருப்பத்தில் நீங்கள் பொருளை வாங்கும் போது, வட்டி தனியாக செலுத்தாமல், கூடுதல் தொகையை பிராசஸிங் கட்டணம் என்று உங்களிடம் தனியாக வசூலிக்கப்படும்.

  நீங்கள் எப்போது நோ-காஸ்ட் ஈஎம்ஐ தேர்வு செய்ய வேண்டும்?

  மிகவும் விலை உயர்ந்த பொருளை வாங்கும் போது, உங்களிடம் மொத்தமாக செலுத்த பணம் இல்லை என்றால், அல்லது முன்பணமாக செலுத்தக்கூடிய தொகை இல்லை என்றாலும், நீங்கள் இந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

  மேலும், புதிதாக கடன் வாங்காமல், உங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது என்றால், அதைப் பயன்படுத்தலாம்.

  நோ-காஸ்ட் ஈஎம்ஐஇல் பொருட்களை வாங்கினாலும், நீங்கள் வங்கிக் கடனுக்கு செலுத்துவது போல தவறாமல் மாதந்திர தவணையை செலுத்த வேண்டும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Business, EMI