ரூ.2,000 வரையிலான ரூபே கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தீயாய் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. இதனால் மக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கவும், பணப்பரிவர்த்தனை செய்வதும் கணிசமான அளவு அதிகரித்து. குறிப்பாக யுபிஐ (UPI) எனப்படும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலமாக பெட்டிக்கடை முதல் மால்கள் வரை மக்கள் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை மறுத்த மத்திய அரசு, இப்போதைக்கு யுபிஐ பேமெண்ட்களுக்கு கட்டணம் விதிக்கும் எண்ணமில்லை என அறிவித்துள்ளது.
மேலும் டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த யுபிஐ பரிவர்த்தனை தற்போது கிரெடிட் கார்டுகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ரூபே (RuPay) கிரெடிட் கார்டு யூஸர்களை குஷியில் ஆழ்த்தக்கூடிய செய்தி வெளியாகியுள்ளது. ரூபே கிரெடிட் கார்டு கடந்த 4 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள நிலையில், இதனை யுபிஐ உடன் இணைக்க ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை” என அறிவித்துள்ளது. அனைத்து முக்கிய வங்கிகளும் தனது வணிக மற்றும் சில்லறை பிரிவு வாடிக்கையாளர்களுக்கு ரூபே கிரெடிட் கார்டுகளை வழங்கி வரும் நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பேமெண்ட் கேட்வே ஆப்களில் கிரெடிட் காட்டை இணைக்கும்போது யுபிஐயின் பின் செட் செய்யும்போது அனைத்து வகை பரிவர்த்தனைகளுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் என்பதற்கான வாடிக்கையாளர் ஒப்புதல் பெறப்படும்” என என்பிசிஎல் தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய் அல்லது அதற்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் (Merchant Discount Rate) கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்டிஆர் என்பது வாடிக்கையாளர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது, வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்தும் கட்டணமாகும். இதன் மூலமாக வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இருதரப்பினரும் சலுகை கிடைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி ரபி சங்கர் கூறுகையில், " வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான கட்டணங்களை வழங்கவே, கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைப்பதற்கான அடிப்படை நோக்கமாகும். தற்போது, யுபிஐ டெபிட் கார்டுகள் மூலம் சேமிப்பு கணக்குகள் அல்லது நடப்புக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது” எனக்கூறியுள்ளார்.
Read More: இப்போ 4ஜி.. விரைவில் 5ஜி - பிஎஸ்என்எல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.
சுற்றறிக்கை வெளியான அக்டோபர் 4ம் தேதியில் இருந்து 2,000 ரூபாய் வரையிலான ரூபே கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்ற நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ள என்பிசிஎல், இதனை சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Credit Card, UPI