ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ அறிவிப்பு!
இந்திய வங்கிகள் ஒழுங்கு முறை ஆணையமான ஆர்பிஐ வழிகாட்டுதல்களிலும் வங்கி லாக்கரில் உள்ள பொருள் மற்றும் பணத்திற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • News18
  • Last Updated: December 5, 2018, 3:21 PM IST
  • Share this:
ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் (RBI monetary policy meet) கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளனர்.

அதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும் தொடரும் என்றும் கூறியுள்ளனர். அதே நேரம் பணப்புழக்கத்தினை அதிகரிக்க உதவும் சேச்யேட்டரி லிக்விடிட்டி ரேஷியோ (SLR - Statutory liquidity ratio) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தினைப் போன்றே நடப்பு நிதி அண்டின் ஜிடிபி கணிப்பையும் 7.4 சதவீதமாகவே ஆர்பிஐ நீட்டித்துள்ளது.


பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தது போலவே ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வங்கிக் கடன் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் மாற வாய்ப்புகள் இல்லை.

சர்வதேச நிதி சந்தை மோசமாக உள்ள நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணயங்கள் சிறந்த அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.3 சதவீதமாக இருந்ததாக நாணய கொள்கை கூட்டம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் சரிவுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவையே காரணம் என்றும் உர்ஜித் படேல் குறிப்பிட்டுள்ளார்.கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் கார்ப்ரேட் வருவாய் மற்றும் தனியார் நுவர்வு உள்ளிட்டவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

பணப் புழக்கத்தினை அதிகரிக்கப் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆர்பிஐ துணை கவர்னர் வைரல் ஆச்சர்யா தெரிவித்தார்.

இந்திய பங்கு சந்தை காலை முதலே சரிந்துள்ள நிலையில் ரெப்போ வட்டி விகித அறிவிப்பின் போது சென்செக்ஸ் 330 புள்ளிகள் வரையிலும், நிப்டி 112 புள்ளிகள் வரையிலும் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஐரோப்பிய சந்தைகளும் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

Also See:

கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டுமா? - ஆ.ராசா பதில்


First published: December 5, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading