உலக அளவில் மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள்: அமெரிக்க இதழ் வெளியிட்ட பட்டியலில் இடம்பிடித்த நீட்டா அம்பானி

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டவுன் மற்றும் கன்ட்ரி( Town & Country) என்ற வாரஇதழ் நீட்டா அம்பானியை மக்களுக்கு சேவை செய்யும் நபராக தேர்வு செய்துள்ளது.

உலக அளவில் மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள்: அமெரிக்க இதழ் வெளியிட்ட பட்டியலில் இடம்பிடித்த நீட்டா அம்பானி
நிடா அம்பானி
  • Share this:
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டவுன் மற்றும் கன்ட்ரி என்ற இதழின் கோடைக்காலப் பதிப்பு உலக அளவில் 2020-ம் ஆண்டுக்கான மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக் காலத்தில் நம்பிக்கைத் தருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில், ரிலையன்ஸ் ஃபௌன்டேஷனின் தலைவர் நீட்டா அம்பானி இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒருவர் அவர் மட்டுமே. ரிலையன்ஸ் ஃபௌன்டேஷன் மூலம் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் உதவியது, பொருளாதார உதவி செய்தது, இந்தியாவில் கொரோனாவுக்கென்று சிறப்பு மருத்துவமனை அமைத்து ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்பிள் தலைவர் டிம் கூக், மைக்கெல் ப்ளூம்பெர்க், லியார்டானோ டிக்காப்ரியோ உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அந்த இதழில், ‘ரிலையன்ஸ் நிறுவனம் லட்சக்கணக்கான ஏழை, முன்களப் பணியாளர்களுக்கு உணவு அளித்தது முகக்கவசங்கள் வழங்கியது, கொரோனாவுக்காக புதிய மருத்துவமனை கட்டியது, கொரோனாவுக்கு நிவாரண நிதி வழங்கியது’ உள்ளிட்ட செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.அமெரிக்கா இதழில் தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய நீட்டா அம்பானி, ’ஒரு பிரச்னை எப்போதும் உடனடி கவனத்தையும், நிவாரணத்தையும் கோருகிறது. கடந்த வருடங்களில், பிரச்னையான சூழலில் உடனடியாக உதவும் வகையில் எங்களை வளர்த்துக்கொண்டோம். சர்வதேச அளவில் எங்களுடைய முன்னெடுப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்தை மகிழ்ச்சியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading