முகப்பு /செய்தி /வணிகம் / அதானி விவகாரத்தால் வீழ்ந்த பங்குச் சந்தைகள் எழுச்சி பெறும் -நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

அதானி விவகாரத்தால் வீழ்ந்த பங்குச் சந்தைகள் எழுச்சி பெறும் -நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman : ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் பணவீக்கம் குறைந்தது - நிர்மலா சீதாராமன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிர்மலா சீதாராமன் CNN-News18-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அதானி விவகாரத்தால் வீழ்ந்த இந்திய பங்குச் சந்தைகள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் மீண்டும் எழுச்சி பெறும் என்று, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது, மத்திய பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினார். மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும், பி.எம். விகாஸ் திட்டத்தை அமல்படுத்தினால், அனைத்து தரப்பினருக்கான வளர்ச்சியும் ஏற்படும் எனவும் கூறினார்.

நாட்டில் அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் அமைந்ததாகவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், அதானி விவகாரம், பங்குச்சந்தை சரிவு குறித்த கேள்விக்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அதானி விவகாரத்தால் வீழ்ந்த இந்திய பங்குச் சந்தைகள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Also Read:  நீங்கள் இதுவரை தாக்கல் செய்த 5 பட்ஜெட்டில் மறக்க முடியாத பட்ஜெட் எது? நிர்மலா சீதாராமன் சுவாரஸ்ய பதில்

தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் பணவீக்கம் குறைந்தது என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், எதிர் வரும் காலங்களில் தொடர்ந்து பண வீக்கம் குறையும் என்றும் உறுதி தெரிவித்தார்.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Nirmala Sitharaman, Tamil News, Union Budget 2023