கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று பாராளுமன்றத்தில் 2023 - 24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் முதல் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெட்வொர்க் 18 குழுமத்திற்கு பிரத்யேக நேர்க்காணல் அளித்துள்ளார். நெட்வொர்க் 18 குழும முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 2023 -24 நிதியாண்டில் 6% முதல் 6.8 % வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் ( ஏப்ரல் 2022 - மார்ச் 2023) ஜிடிபி வளர்ச்சி 7% ஆக உள்ள நிலையில் வரும் நிதியாண்டில் சற்று இறக்கத்துடன் 6% முதல் 6.8% என்ற அளவிலேயே வளர்ச்சி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “உலக சந்தையில் நிச்சயமற்ற தன்மையை இந்தியா உட்பட எந்த நாட்டாலும் தவிர்க்க முடியவில்லை. எனவே உலக பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நாம் தீர்மானித்திருக்கிறோம்.” என்றார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியா நன்கு நிர்வகிக்கப்படும், நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சந்தையாக உள்ளது. எங்கள் கட்டுப்பாட்டாளர்கள் சில நிர்வாக நடைமுறைகளில் மிகவும் கண்டிப்பானவர்கள். கடந்த பல ஆண்டுகால அனுபவங்கள் பொருளாதார நிலைத்தன்மைக்கு உதவியுள்ளது.” என்றார்.
மேலும் படிக்க : Exclusive | 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டது ஏன்? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
உலகின் பிற நாடுகளைப் போலவே, இந்தியாவும் நிதி நிலைமைகளை கையாள்வதில் அசாதாரண சவால்களை எதிர்கொண்டது மற்றும் ஐரோப்பாவில் நீடித்த போரினால் (ரஷ்யா -உக்ரைன்) விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளை எதிர்கொண்டது, ஆனால் பெரும்பாலான நாடுகளைவிட அவற்றை நாம் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறோம் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.