ஹோம் /நியூஸ் /வணிகம் /

சிறு குறு நிறுவனங்களுக்கு அதிகளவில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

சிறு குறு நிறுவனங்களுக்கு அதிகளவில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • 1 minute read
  • Last Updated :

நாட்டில் உள்ள சிறு,குறு நிறுவனங்களுக்கு, அதிகளவில் கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் மற்றும் தேவை குறைந்துள்ளதால், வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கவேண்டும் என கூறினார்.

இதுகுறித்து வங்கிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகளுடன் இணைந்து தனியார் நிதி நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் 2020 மார்ச் மாதம் வரை, நிதி நெருக்கடியில் உள்ள சிறு,குறு நிறுவனங்களை, வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு,குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Watch Also:

Published by:Yuvaraj V
First published:

Tags: Minister Nirmala Seetharaman, MSME