பாடத்தையும், கூடவே ஒரு வாய்ப்பையும் கொண்டு வந்திருக்கிறது இந்த கொரோனா ஆபத்து..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

8.19 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் ஜன் தன் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. என்.எஸ்.ஏ.பி மூலமாக பயனாளர்களுக்கு 3000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

பாடத்தையும், கூடவே ஒரு வாய்ப்பையும் கொண்டு வந்திருக்கிறது இந்த கொரோனா ஆபத்து..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • Share this:

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான ஐந்தாம் கட்ட அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டு வருகிறார்.









கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் முடங்கிய நிலையில், அதை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாள்களாக இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார்.செய்தியையும், கூடவே ஒரு வாய்ப்பையும் கொண்டு வந்திருக்கிறது இந்த ஆபத்து. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடனேயே கரீப் கல்யாண் யோஜனா மூலமாக ஏழைகளுக்கு உணவு கிடைப்பதற்கான வழிகளை அமல்படுத்தினோம். கடந்த நான்கு நாட்களைப் போல, நிலம், தொழிலாளர்கள், சட்டங்கள் மற்றும் பணம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டோம். இன்று அதைத் தொடர்ந்து சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம். 8.19 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் ஜன் தன் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. என்.எஸ்.ஏ.பி மூலமாக பயனாளர்களுக்கு 3000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

ஆத்ம நிர்பார் பாரத் என்னும் சுயசார்பு இந்தியாவை மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், பொருளாதாரத் தொகுப்பு குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து பேசி வருகிறார்.











First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading