Home /News /business /

பட்ஜெட் அறிவிப்புகளுக்கு பிறகு தொடர்ந்து 3வது நாளாக சரிவை நோக்கி பங்குச்சந்தை!

பட்ஜெட் அறிவிப்புகளுக்கு பிறகு தொடர்ந்து 3வது நாளாக சரிவை நோக்கி பங்குச்சந்தை!

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
பட்ஜெட் 2019-ல் வெளியிட்ட வரி அறிவிப்புகள் திருப்தி அடையாத முதலீட்டாளர்கள், ஏமாற்றம் அடைந்ததால் பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதலீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் இருப்பது, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழல் போன்ற காரணங்களால் தான் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த மாதம் முதல் கார்ப்ரேட் நிறுவனங்கள் காலாண்டு அறிக்கைகளை வெளியிட உள்ளதால், முதலீட்டாளர்கள் பட்ஜெட்டை மறந்து கார்ப்ரேட் வருவாய் மீது கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட உள்ளது.

காலை 10:30 மணி நிலவரத்தின் படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 210.29 புள்ளிகள் என 0.54 சதவீதம் சரிந்து 38,510.61 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 70.85 புள்ளிகள் என 0.61 சதவீதம் சரிந்து 11,486.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரம், ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம், மெட்டல், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டு வருகின்றன. மறுபக்கம் ஆட்டோமொபைல், வங்கி, டெக், ஐடி. நிதி உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.19% சரிந்து 68.96 ரூபாயாக உள்ளது.

சர்வதேச அளவில் இருந்து வந்த வர்த்தக போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில் பிரெனெட் கச்சா எண்ணெய் விலை 0.19 சதவீதம் சரிந்து பேரல் 64.11 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களிலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Nifty, Sensex, Union Budget 2019

அடுத்த செய்தி