Home /News /business /

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் தாறுமாறாக உயர்ந்த பங்குச்சந்தை!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் தாறுமாறாக உயர்ந்த பங்குச்சந்தை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 60 பைசா உயர்ந்து 69.92 ரூபாயாக உள்ளது. இதுவே ஐ.டி. பங்குகள் சரிவுக்கான காரணமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
    2019 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால் பங்குச்சந்தை குறியீடுகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

    பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளின் போது கூட பாஜக முன்னிலை வகிக்கும் போது சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை சரிந்தது. தற்போது பாஜக ஆட்சியே தொடரும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்படுவதால் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் உள்ளது. இதுவே தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தால் பங்குச்சந்தை சரியும்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் இன்று காலை 11:18 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 927.84 புள்ளிகள் என 2.45 சதவீதம் உயர்ந்து 38,844.81 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 266.65 புள்ளிகள் என 2.34 சதவீதம் உயர்ந்து 11,673.80 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இது ஒவ்வொரு முறை தேர்தல் முடிவுகள் வரும்போது நடைபெறும் மாற்றங்களே தவிர வேறு இல்லை.

    துறைவாரியான நிலவரத்தைப் பார்க்கும் போது ஐ.டி., மற்றும் டெக் துறை பங்குகளைத் தவிர கட்டுமானம், ரியாலிட்டி, மெட்டல், ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், ஆட்டோமொபைல், அங்கி, நிதி டெலிகாம், எனா அனைத்துத் துறைகளும் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 60 பைசா உயர்ந்து 69.92 ரூபாயாக உள்ளது. இதுவே ஐ.டி. பங்குகள் சரிவுக்கான காரணமாக உள்ளது.

    சர்வ்தேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.57 சதவீதம் குறைந்து பேரல் 72.21 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.18 சதவீதம் குறைந்து 62.76 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Exit Poll 2019, Nifty, Sensex, Stock market

    அடுத்த செய்தி