ஹோம் /நியூஸ் /வணிகம் /

வெறும் ரூ.10,000 இருந்தால் போதும்; இனி சில்லறை முதலீட்டாளர்களும் நல்ல வருமானம் பெறலாம்..!

வெறும் ரூ.10,000 இருந்தால் போதும்; இனி சில்லறை முதலீட்டாளர்களும் நல்ல வருமானம் பெறலாம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

NHAI InvIT | நாட்டின் வளர்ச்சிக்காக இனி சில்லறை முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய அசத்தலான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டின் வளர்ச்சிக்காக இனி சில்லறை முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய அசத்தலான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி சிறிய அளவிலான முதலீடுகளுக்கும் நல்ல வருமானம் பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

  சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு:

  தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு அறக்கட்டளை (NHAI InvIT), மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை ஆதரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) கட்டமைக்கப்பட உள்ள மூன்று சாலைகள் அமைக்கும் பணிக்கான ரூ.1,430 கோடியை உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவெடுத்துள்ளது.

  இதைத் தவிர, தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு அறக்கட்டளை ரூ.1,500 கோடியை மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் தற்போது சிபியிடம் கோரப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தின் கீழ் சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு என்சிடி-யின் மதிப்பு 1000 ரூபாய் என்ற விதத்தில், 10 என்சிடியை (மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்) வாங்க வேண்டும்.

  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், NHAI InvIT-யின், 24 ஆண்டுகள் நீண்ட கால முதிர்வு கொண்ட, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் அல்லது NCDகள் மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1500 கோடியை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் பங்குகள் தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணம் வட்டியுடன் திரும்ப செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

  கூப்பன் மீது அரையாண்டுக்கு ஒருமுறை 7.9 சதவீத வட்டி செலுத்தப்படும், இது ஆண்டுக்கு 8.05 சதவீதமாக கணக்கிடப்படும். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்துடன் கணிசமான அளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

  கடன் பத்திர வெளியீடு எப்போது?

  மாற்ற முடியாத கடன் பத்திர வெளியீடு அக்டோபர் 17, 2022 திங்கட்கிழமை தொடங்கப்பட்டு, நவம்பர் 7, 2022 திங்கள் அன்று முடிவடைய உள்ளது.

  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், தேசிய பணமாக்கக் திட்டத்தின் கீழ், 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பணமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால் திரட்டப்பட்ட நிதியை புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியானது, உட்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு காலக்கட்டத்துக்குப் பிறகு பணத்தை ஈட்டு தொகையுடன் திரும்ப அளிக்கப்படும்.

  சாலைகள் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் மூலமாக இதுவரை, NHAI InvIT ரூ. 8,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது. இப்போது கூடுதலாக ரூ.2,850 கோடி திரட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Business Idea, NHAI