• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் பிரபமடையும் NFT... NFT என்றால் என்ன? பயன்பாடு என்ன?

பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் பிரபமடையும் NFT... NFT என்றால் என்ன? பயன்பாடு என்ன?

இந்த NFTகள் என்பவை யாவை? நீங்கள் அதில் முதலீடு செய்ய வேண்டுமா? 2021 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான வார்த்தையான NFTகளின் கவர்ச்சிகரமான உலகிற்குள் நுழைந்து அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வோம்.

 • Share this:
  இப்போதைய சூழலில் பிரபலங்களைப் பற்றியச் செய்திகளும் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியச் செய்திகளுமே ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அதாவது இங்கு IPL பற்றி பேசப்படவில்லை, இது வேறு, இவற்றை NFTகள் என்று கூறுகிறார்கள். திரைத்துறையில் உள்ள அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் தொடங்கி, ஜகீர் கான் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் வரைக்கும், இந்நாட்களில் எங்கு பார்க்கிலும் NFTகள் பேசுபொருளாக உள்ளன.

  இந்த NFTகள் என்பவை யாவை? நீங்கள் அதில் முதலீடு செய்ய வேண்டுமா? 2021 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான வார்த்தையான NFTகளின் கவர்ச்சிகரமான உலகிற்குள் நுழைந்து அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வோம்.

  NFTகள் என்பவை யாவை?

  NFTகள் என்பதன் விரிவாக்கம் நான்-ஃபன்ஜிபிள் டோக்கன்கள்; இவை விர்ச்சுவல் அசெட்கள் எனப்படுகின்றன, இவற்றிற்கு தோற்றமோ வடிவமோ இல்லை, ஆனால் சொத்தின் ஒரு பகுதியாக விற்கப்படலாம், எனவே உரிமையாளரிடம் மட்டுமே சொத்தின் அசல் நகல் இருக்கும். சற்று விளக்கமாக பார்ப்போம்.

  ஃபன்ஜிபிள் என்பது பரிமாற்றத்தைக் குறிக்கிறது - எனவே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை மற்றொரு ஐம்பது ரூபாய் நோட்டுடன் மாற்றலாம், அந்த நோட்டிற்கு நான்தான் சரியான உரிமையாளர் என்று யாரும் உரிமை கோர மாட்டார்கள். உண்மையில், ஃபன்ஜிபிளிட்டி மத்திய வங்கி வழங்கும் ஃபியட் கரன்சிகளை வர்த்தகத்திற்கான எக்ஸ்சேஞ்ச் மீடியமாக அனுமதிக்கிறது.

  மறுபுறம், நான்-ஃபன்ஜிபிள் என்பது, கேள்விக்குரிய டோக்கன்கள் அல்லது சொத்துக்கள் ஒன்றுக்கொன்று மாற்ற முடியாதவை என்பதைக் குறிக்கிறது. எனவே, நீங்கள் NFT ஆக வாங்கும் எந்தவொரு கலைப்படைப்போ அல்லது சொத்தோ தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் மற்றும் அதன் அசல் நகல் எப்போதும் உரிமையாளருக்கு சொந்தமானதாகவே இருக்கும். எனவே, NFTகள் என்பவை எக்ஸ்சேஞ்ச் செய்ய முடியாத டிஜிட்டல் சொத்துகளின் வடிவத்தில் சேகரிக்கக்கூடிய பொருட்களாகக் காணப்படுகின்றன.

  NFT உரிமை எவ்வாறு வேலை செய்கிறது –

  NFTகள் என்று வரும்போது எத்திரியம் மற்றவற்றை வழிநடத்துகிறது. ZebPay போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் INR ஐப் பயன்படுத்தி நீங்கள் ஈதரை வாங்கலாம். ஈதர் என்பது எத்திரியம் நெட்வொர்க்கில் உள்ள கிரிப்டோகரன்சி ஆகும், இது ஒரு பிளாக்செயின். கிரிப்டோகரன்சியின் மதிப்பும் ஃபன்ஜிபிள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே உங்களுக்குச் சொந்தமான ஒரு ஈதர் உங்கள் நண்பருக்குச் சொந்தமான ஒரு ஈதரைப் போன்றது.

  மறுபுறம், நீங்கள் எத்திரியம் பிளாக்செயினைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான கிரிப்டோகிராஃபிக் டோக்கனான NFT ஐ உருவாக்கியுடன், நீங்கள் அதைச் சொந்தமாக்கி கொள்கிறீர்கள், மேலும் நீங்கள் அதை அதிக விலைக்கு ஏலம் எடுக்கலாம். NFT ஐ வாங்குவது என்பது கிரிப்டோகரன்சியில் ஏலத் தொகையை செலுத்தி, அதன் மீதான உங்கள் உரிமையைக் காண்பிக்க, பிளாக்செயினில் உங்கள் பெயரைச் சேர்த்து அதை உங்களின் தனித்துவமான கலைப் படைப்பாகச் சேகரிப்பதாகும்.  ஒரு NFT ஐ வாங்கிய நபர் அதை மற்றொரு ஆர்வமுள்ள நபருக்கு விற்கலாம், இருப்பினும் பிளாக்செயின் இயங்குதளமானது அதன் டிஜிட்டல் வரலாற்றைப் பராமரிக்க படைப்பாளரின் பெயரையும் அவரைத் தொடர்ந்து அதை வாங்கும் உரிமையாளர்களின் பெயரையும் எப்போதும் வெளிப்படுத்தும்.

  NFTகள் என்பவை கலைப்படைப்புகள் முதல் ஓவியங்கள் வரை, மோஷன் போஸ்டர்கள், மியூசிக் பீஸ்கள், கேம் பிளே, வீடியோ பதிவுகள், மீம்ஸ்கள் அல்லது உங்கள் சமூக ஊடக இடுகைகள் என எந்தவொரு டிஜிட்டல் சொத்துக்களாகவும் இருக்கலாம்! Twitter இன் ஜாக் டோர்சே தனது முதல் ட்வீட்டை NFT ஆக இந்த ஆண்டு மார்ச் மாதம் $2.9 மில்லியனுக்கும் அதிகமான செலவில் விற்றிருக்கிறார்.

  NFTகளின் விலை என்ன?

  டிஜிட்டல் கலைஞரான பீப்பிள் தனது 'எவ்ரிடேஸ்' NFT ஐ $69 மில்லியனுக்கு விற்ற பிறகுதான், உலகத்தின் கவனம் NFTகளின் பக்கம் திரும்பியது. அப்போதிருந்து, மில்லியன் கணக்கான டாலர் மதிப்பு கொண்ட அனைத்து வகையான NFT களையும் மக்கள் ஏலம் எடுத்து விற்றுள்ளனர். மீம்களான ‘டிசாஸ்டர் கேர்ள்’ $473,000 க்கும், ‘நயன் கேட்’ $590,000 க்கும் விற்கப்பட்டுள்ளது. மற்ற பிரபலமான NFTகளில் ரிக் அண்ட் மார்ட்டி, கிரிப்டோபங்க்ஸ் மற்றும் World Wide Web இன் அசல் ஆதார குறியீடு போன்றவை உள்ளடங்கும்.

  இந்தியாவில் அவற்றின் தாக்கம் –

  NFTகள் இந்தியாவிலும் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன. நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த NFT களை தொடங்கியுள்ளார், அவை அவரது வாழ்க்கையை கருப்பொருளாகக் கொண்டுள்ளன, மேலும் பியாண்ட் லைஃப் என்ற மேடையில் அவர் விவரித்த, அவரது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனின் புகழ்பெற்ற படைப்பான மதுஷாலாவின் வசனங்களையும் கொண்டுள்ளன. சன்னி லியோன் தனது சொந்த தனித்துவமான NFT கலெக்ஷன், ஹேண்ட்-அனிமேடட் ஆர்டை அறிமுகப்படுத்திய முதல் பாலிவுட் நடிகை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சல்மான் கானும் BollyCoin என்ற தளத்தின் மூலம் NFTகளில் தான் நுழையவிருப்பது பற்றி அறிவித்துள்ளார்.

  கிரிக்கெட் வீரர்களும் இதற்கு விதி விலக்கல்ல. நிதாஹஸ் டி20 தொடரின் போது, தினேஷ் கார்த்திக் பங்களாதேஷுக்கு எதிராக கடைசி பந்தில் தான் விளாசிய சிக்ஸரை NFT ஆக மாற்றியுள்ளார். ரிஷப் பந்த், தனது சின்னமாக கிரிக்கெட் தருணங்களின் பிரத்தியேக டிஜிட்டல் சேகரிப்புகளை உருவாக்க, கிரிக்கெட் நினைவுச்சின்னங்களுக்கு உரிமம் வழங்குவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட Rario இல் இணைந்துள்ளார்.

  நடிகர் விஷால் மல்ஹோத்ராவும், ராப்பர் ரஃப்தாரும் இதில் இணைய உள்ளனர் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிளாக்செயின் தளமான கிரிக்கெட் ஃபவுண்டேஷனும் வி. வி. எஸ். லட்சுமண், பார்த்தீவ் படேல், ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா, தீப் தாஸ்குப்தா, பிரக்யான் ஓஜா போன்ற வீரர்களின் ஆதரவுடன் கிரிக்கெட் NFTகளை உருவாக்குவதற்கான தனது பயணத்தை அறிவித்துள்ளது.

  NFT களைச் சுற்றி இவ்வளவு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும், இந்த டிஜிட்டல் சொத்துக்களைச் சுற்றியுள்ள தாக்கம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று எண்ணுங்கள். NFTகள் என்றால் என்னவென்று இப்போது உங்களுக்குத் தெரியும், எனவே இந்த நபர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளைக் கவனித்துக்கொண்டே இருங்கள், மேலும் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் அல்லது பாலிவுட் பிரமுகர்களின் NFTயை சேகரிக்கும் முதல் நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

  உங்கள் சொந்த கிரிப்டோகரன்சி பயணத்தைத் தொடங்கி, உங்களுக்குப் பிடித்த பிரபலங்களைத் பின்தொடருங்கள். உங்கள் கிரிப்டோ முதலீடுகளை இன்றே தொடங்குங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Selvi M
  First published: