உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள்ளனர். ஆனாலும் தற்போது வரை அந்த அலை ஓயவில்லை. அந்த வரிசையில் அமெரிக்க ஐடி நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனமும் தற்போது தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும் இலக்கை அடைவதில் தொய்வு ஆகிய காரணங்களினால் இதனை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திடீர் அறிக்கையால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.தற்போது கிடைத்துள்ள தகவலின் படி சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனமானது தன்னுடைய பணியாளர்களில் 2500 பேரை பணியிலிருந்து நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஊடகத்திற்கு அவர்கள் அளித்த அறிக்கையில் ஆயிரத்திற்கும் குறைவான பணியாளர்களே நீக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை மொத்தமாக 73,000 பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விற்பனை குறைவு மற்றும் பலவித பொருளாதார நெருக்கடிகளால் செலவை குறைப்பதற்காக இந்த கடினமான முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த மாதம் இந்த பணி நீக்க நடவடிக்கைகளுக்கு இடையில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் துணை தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரெட் டெய்லர், வரும் ஜனவரி 31, 2023 முதல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இவரது இடத்தை 1999 ஆம் ஆண்டு சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் துவங்கப்பட்ட போது, இதன் துணை நிறுவனராக இருந்த மார்க் பெனியாஃப் என்பவர் புதிய பொறுப்புகளை ஏற்பார் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இவர் பதவியேற்கவுள்ளார்.
அதே நேரத்தில் அமேசான் நிறுவனமும் மீண்டும் ஒருமுறை தனது பணி நீக்க நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. கடந்த வருடம்தான் ஆயிரக்கணக்கான பணியாளர்களை அமேசான் நிறுவனம் பணியை விட்டு நீக்கியது என்பது நினைவில் இருக்கலாம். 2023 ஆம் ஆண்டி இடைப்பட்ட பகுதியில் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் இடம் பெறலாம் எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன்டி ஜெசி பணியாளர்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Tamil Nadu