Home /News /business /

மோடியின் வரலாற்று வெற்றிக்கு அடுத்த நாள் லாபத்துடன் முடிந்த பங்குச்சந்தை!

மோடியின் வரலாற்று வெற்றிக்கு அடுத்த நாள் லாபத்துடன் முடிந்த பங்குச்சந்தை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 623.33 புள்ளிகள் உயர்ந்து 39,434.72 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 187.05 புள்ளிகள் உயர்ந்து 11,844.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.

    இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 623.33 புள்ளிகள் உயர்ந்து 39,434.72 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 187.05 புள்ளிகள் உயர்ந்து 11,844.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

    மும்பை பங்குச்சந்தையில் ரியாலிட்டி, ஆட்டோமொபைல், டெலிகாம், வங்கி, கட்டுமானம், நிதி, மெட்டல், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெக், ஐ.டி., ஆற்றல் என அனைத்துத் துறை பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் அளிக்கப்படுகிறது.

    லாபம் அளித்த டாப் 5 பங்குகள்:


    ஐசிஐசிஐ வங்கி, எல்&டி, பார்தி ஏர்டெல், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ்.

    நட்டம் அளித்த பங்குகள்:


    என்டிபிசி, எச்சிஎல் டெக், டிசிஎஸ், இந்துஸ்தான் யூனிலிவர்.

    ரூபாய் மதிப்பு:


    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.66 சதவீதம் உயர்ந்து 69.57 ரூபாயாக உள்ளது.

    கச்சா எண்ணெய் நிலவரம்:


    பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று 4.77 சதவீதம் குறைந்து பேரல் 67.76 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 6.06 சதவீதம் குறைந்து 57.91 டாலராக உள்ளது. எனவே இந்தியாவில் தேர்தல் அறிவித்தது முதல் உயராமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் அதிகளவில் இருக்காது என்று கூறலாம்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Nifty, Sensex, Stock market

    அடுத்த செய்தி