ஹோம் /நியூஸ் /வணிகம் /

2022 பாடா படுத்திடுச்சா? 2023-இல் கடன் இல்லாம இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

2022 பாடா படுத்திடுச்சா? 2023-இல் கடன் இல்லாம இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

கடன் இல்லாத 2023...

கடன் இல்லாத 2023...

கிரெடிட் கார்டை நிலுவையில் திருப்பிச் செலுத்துவதற்கு தனிநபர் கடன் போன்ற மலிவான கடன் விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புத்தாண்டு ஒவ்வொருக்கும் ஒரு விதமான அனுபவத்தை வழங்குகிறது. புத்தாண்டு வந்தால் உறுதிமொழிகள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு புத்தாண்டும் நாமும் வகை, வகையான உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதில் எத்தனை உறுதிமொழிகளை நிறைவேற்றுகிறோம் என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். எந்த உறுதிமொழியானாலும் அதில் திடமாக இருப்பது மிகவும் முக்கியம் அதற்கு நீங்கள் புத்தாண்டு உறுதிமொழிகளை முதலில் சிறிதாக வைத்துக்கொள்ளுங்கள்.

அதிலும் குறிப்பாக நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் மட்டும் புத்தாண்டு உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது உண்மையில் உங்களுக்கு பயனளிக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடனை மட்டும் வாங்கவே கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால், இந்த காலத்தில் கடனே இல்லாதவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாகவே இருக்கிறது. அந்த வகையில் கடன் இல்லாமல் வருகிற புத்தாண்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பதற்கான டிப்ஸ்களை இப்பொழுது நாம் காண்போம்.

2023ல் கடனில்லாமல் இருக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள் இதுதான்..

* வரவு / செலவுகளை பட்டியலிடுங்கள் (Draw up a list of income and outgoings)

சிம்பிள் டெக்னாலஜிஸின் (Simpl Technologies) தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான நித்யானந்த் ஷர்மா (Nityanand Sharma, CEO and Co-founder) கூறுகையில், முதலில் ஒருவர் கடனை நிர்வகிக்கும்போது அவர்களின் வரவு மற்றும் செலவுகளை பட்டியலிட வேண்டும். "புதிய ஆண்டில், நிலையான செலவுகளைச் செய்வதன் மூலம் பிளானை தொடங்கவும். ஒவ்வொரு மாதமும் நிச்சயம் ஏற்படும் செலவுகளை பட்டியலிடுங்கள். கட்டாய செலவுகளை தவிர்த்து மற்ற வழிகளில் செலவாகும் பணத்தை முதலில் பட்டியலிடுங்கள் அதன் பின்னர் தேவையற்ற செலவுகளில் இருந்து பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழிகளை யோசியுங்கள். ஒரு சில ஸ்னாக்ஸ்களை கட்டுப்படுத்துதல், சினிமாவிற்கு செல்வதை குறைத்தல், தேவைக்கு அதிகமான புதிய ஆடைகளை வாங்குவது போன்ற செலவுகளை முடிந்த அளவிற்கு குறைத்துக்கொள்வது உங்கள் பட்ஜெட்டை பலமாக வைத்திருக்கும்.

* ஒவ்வொரு நிதி அறிக்கைகளையும் சேகரியுங்கள் (Collect each financial statement)

இது உங்களுடைய பேங்க் விவரப்பட்டியல் (Statement), முதலீட்டுக்கு கணக்குகள், அண்மையில் கட்டிய சேவைகளுக்கான ரசீதுகள் மற்றும் எந்த ஒரு வரவு அல்லது செலவுக்கான விவரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். பட்ஜெட்டில் முக்கியமான ஒரு குறிப்பு மாதாந்திர சராசரி வரவு செலவுகளை கண்டறிவது. எனவே எவ்வளவு விவரங்களை நீங்கள் திரட்ட முடியுமோ அவ்வளவு விவரங்களைத் திரட்டுவது நல்லது. நிலையான செலவுகள் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏதும் இன்றி தொடர்ச்சியாக வருபவை. இவை உங்கள் தினசரி வாழ்வில் அங்கமாக இருக்கும். உங்கள் வீட்டு வாடகை, கார் தொடர்பான செலவுகள், கேபிள் டிவி அல்லது இன்டர்நெட் இணைப்பு சந்தா, துப்புரவுச் செலவு, கிரெடிட் கார்டு நிலுவைகள் போன்றவை இதில் அடங்கும். இவை பெரும்பாலும் அவசியமானவை மற்றும் பட்ஜெட்டில் அதிக மாற்றத்திற்கு உள்ளாகாதவை.

* செலவுகளைக் குறைக்கவும் (Cut expenses)

ஸ்மார்ட்காயின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் கார்க் (Rohit Garg, Co-Founder & CEO, SmartCoin), கடனைத் தீர்ப்பதற்காக மக்கள் தங்கள் செலவுகளைக் குறைக்க அறிவுறுத்துகிறார். ஜிம் உறுப்பினர், கேபிள் டிவி மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சந்தாக்கள் (gym memberships, cable TV, and online streaming subscriptions) போன்ற சேவைகளை நீங்கள் முடிந்த அளவிற்கு குறைக்க முடியும் என்பதால் ஒருவர் மாதாந்திர சந்தாக்களை மதிப்பாய்வு செய்யலாம். சம்பாதித்த பணம் செலவாகும் விதத்தை எழுதி வைக்கவும். மாதத்தின் முடிவில் நிதிச் செயல்பாட்டை மதிப்பிடுங்கள், ஏதேனும் செலவுகள் தேவையற்றதாகத் தோன்றினால், அங்கேயே அதை கட் செய்யுங்கள்.

உதாரணத்திற்கு, ஒருவர் தங்களுக்குத் தேவையானவற்றை ஒதுக்கி தேவையில்லாததை பில்டர் செய்து அதை மாதம் முழுவதிலும் கடைப்பிடிக்கவும். ஒரு மாதத்தில் நீங்கள் செய்யவிருக்கிற அனைத்து செலவுகளையும் பட்டியல் இடுங்கள். இது அடகு நிலுவைகள், கார் பராமரிப்பு செலவுகள் அல்லது நிலுவைகள், வாகனக் காப்பீடு, மளிகை, அத்தியாவசிய சேவைகள், பொழுதுபோக்கு, லாண்டரி, ஓய்வுகால அல்லது கல்லூரி சேமிப்புகள் என நீங்கள் செய்யும் ஒவ்வொரு பைசாவையும் கணக்கில் எடுங்கள்.

* EMI பேமெண்ட்டுகள் ஆட்டோமேட்டடாக மாற்றுங்கள் (Automate EMI payments)

ஆட்டோ டெபிட் விருப்பத்தைத் (auto-debit option) தேர்ந்தெடுப்பதன் மூலம் தனிநபர்கள் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், கடன் வாங்கியவர்கள் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் செலுத்த முயற்சிக்க வேண்டும், மேலும் பில் தொகையை அடுத்த பில்லிங் சுழற்சிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வேறுபாடும் செலவுகள் ஒவ்வொரு மாதமும் மாற்றத்திரு உள்ளாகும் செலவுகள் ஆகும். இது மாதாந்திர மாளிகைப் பொருட்கள், பெட்ரோல், பொழுதுபோக்கு, வெளியில் உண்பது, பரிசுகள் போன்றவற்றை உள்ளடக்கும். பட்ஜெட்டில் சரிகட்டத் தேவையெழும்போது இவை முக்கியமான ஒன்றாக இருக்கும். இதில் முடிந்த அளவிற்கு EMI மூலம் சரிக்கட்ட பாருங்கள்.

* இருப்பு பரிமாற்றத்தைப் பயன்படுத்தவும் (Use balance transfer)

இருப்பு பரிமாற்றம் என்பது ஒரு வகையான மறுநிதியளிப்பு வசதி ஆகும், இது கடன் வாங்கியவருக்கு ஒரு கிரெடிட் கார்டின் நிலுவையில் உள்ள வசதியை மற்றொரு வட்டி விகிதத்துடன் மாற்ற உதவுகிறது. சாஹில் அரோரா - இயக்குனர் பைசாபஜார் (Sahil Arora—director, Paisabazaar), "பரிமாற்ற அட்டை (transferee card) வழங்குபவர் வழக்கமாக இரண்டு முதல் ஆறு மாதங்களுக்கு இடையில் ஒரு விளம்பர வட்டி காலத்தை நீட்டிக்கிறார், அந்த நேரத்தில் அது குறைந்த அல்லது குறைந்த நிதிக் கட்டணங்களை வசூலிக்கிறது. இது அட்டைதாரருக்கு சேமிக்க ஒரு விண்டோ காலத்தை (window period) வழங்கும் மற்றும் பரிமாற்ற நிலுவையை திருப்பிச் செலுத்துவதற்கான நிதியை ஏற்பாடு செய்யும்," என்று பரிந்துரைக்கிறார்.

*அனைத்து வருமானங்களையும் பதிவிடுங்கள் (Record all earnings)

நீங்கள் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது உங்களுக்கு வெவ்வேறு வெளி வருமானங்கள் இருந்தாலோ அனைத்தையும் பதிவு செய்து வைத்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள். உங்கள் வருமானம் சம்பளமாக இருந்தால் அதில் வரி ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் கைக்கு கிடைக்கும் நிகர சம்பளத்தை மொத்த வருமானமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.

* கடன் ஒருங்கிணைப்புக்கு செல்லுங்கள் (Go for debt consolidation)

கடனைத் தீர்ப்பதற்காக கடன் வாங்குபவர்களும் கடன் ஒருங்கிணைப்புக்கு செல்லலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கிரெடிட் கார்டை நிலுவையில் திருப்பிச் செலுத்துவதற்கு தனிநபர் கடன் போன்ற மலிவான கடன் விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். ஈ.எம்.ஐ மாற்று வசதிகளின் வட்டி விகிதம் (rate of interest of EMI) முதன்மையாக கிரெடிட் கார்டு வைத்துள்ளவரின் கடன் சுயவிவரத்தைப் பொறுத்தது என்றாலும், வட்டி விகிதங்கள் வழக்கமாக அதே கடன் சுயவிவரத்திற்கான அதே கடன் வழங்குநரிடமிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கடன் வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்கும்.

வீட்டில் நாம் போடும் நிதி பட்ஜெட் என்பது வருமானம் மற்றும் அதற்கெதிரான செலவுகளை பட்டியலிடும் ஒரு வழிமுறை. பொதுவாக இது மாதம் ஒருமுறை செய்யப்படும். பட்ஜெட் அல்லது வரவு-செலவுத் திட்டம் என்பது தற்போது சிக்கனமாகச் செலவழிப்பது என்கிற பொருளிலும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மேற்சொன்னவை உங்களுக்கு நிச்சயம் உதவும். வருகிற 2023ல் கடன் இல்லாமல் இருப்பதை மேற்சொன்ன உறுதிமொழியுடன் துவங்குங்கள்.

First published:

Tags: New Year, New Year 2023, Newyear resolution, Savings, YearEnder 2022