• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு...!

கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஒரு முறைகூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால், இந்த வசதிகள் ரத்து செய்யப்படும்.

  • Share this:
    கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.

    2016-ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, கிரெடிட் கார்ட் முறைகேடுகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் இருந்தது.

    இந்நிலையில், கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளை தடுக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 15-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.

    அதில், ஒரு வாடிக்கையாளர் தனது கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுக்கு என்ன வகையான சேவைகள் வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியது.

    இந்த நடைமுறை மார்ச் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் கூறியிருந்தது.

    இதன்படி, ஒருவர் தனது கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டில், ஆன்லைனில் பயன்படுத்தும் வசதி, வெளிநாடுகளில் பயன்படுத்தும் வசதி மற்றும் பாஸ்வேர்ட் இல்லாமல் பணம் எடுத்து கொள்ளும் வசதி வேண்டுமா இல்லையா என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் வங்கிகள் பணம் எடுக்க அனுமதித்துள்ள வரம்பிற்குள், ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுக்கலாம், ஸ்வைப் மெஷினில் எவ்வளவு பணம் செலுத்தலாம், வெளிநாடுகளில் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்ற வரம்பையும் வாடிக்கையாளர்களே தனித்தனியாக நிர்ணயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    இன்று முதல் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகள், இந்தியாவில் உள்ள ஏடிஎம் மற்றும் ஸ்வைப் மெஷின்களின் மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் இருக்கும். ஆன்லைனில் கூட பயன்படுத்த முடியாது. ஆன்லைனில் பரிவர்த்தனைக்கு கூட பயன்படுத்த முடியாது.

    இந்த வசதிகளை ஒரு வாடிக்கையாளர் தேவைப்படும் போது பயன்படுத்தி விட்டு, மீண்டும், எப்போது வேண்டுமானாலும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து நீக்கி விடலாம்.

    ஒருவேளை, தற்போது பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை ஒரு முறைகூட ஆன்லைன் பயன்பாட்டிற்கோ அல்லது பாஸ்வேர்ட் இல்லாமல் டேப் செய்யும் வசதியிலோ பயன்படுத்தவில்லை என்றால், இன்று முதல் இந்த வசதிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: