Home /News /business /

ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!

ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!

கேஷ் டெபாசிட்

கேஷ் டெபாசிட்

பணம் டெபாசிட் செய்யும் போதும் அல்லது பணத்தை எடுக்க செல்லும் போது கையில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை கட்டாயம் கொண்டு செல்லுங்கள்

    கூட்டுறவு வங்கிகள், போஸ்ட் ஆபீஸில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்கும் புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

    கூட்டுறவு வங்கிகள், அரசு வங்கிகள், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மத்திய அரசு சேமிப்பு கணக்கில் பணத்தை போட, அல்லது எடுக்க சில புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனிமேல் நீங்கள் புதிய விதிமுறைக்கு ஏற்றவாறு ஃபாலோ செய்ய வேண்டும். அதன்படி இனி ஒரு நிதி ஆண்டில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலும், அல்லது போட்டாலும் பான் கார்டு, ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

    போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!

    இந்த புதிய விதிகள் வரும் மே 26, 2022 முதல் அமலுக்கு வருகின்றன. கூட்டுறவு வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் என அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் போதும் அல்லது பணத்தை எடுக்க செல்லும் போது கையில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை கட்டாயம் கொண்டு செல்லுங்கள். அதுமட்டுமில்லை நடப்புக் கணக்கைத் தொடங்கவோ, நிரந்தர கணக்கு எண் அல்லது பயோமெட்ரிக் ஆதாரை வழங்குவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    LIC : ஐபிஓ பங்கு உங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதா? நீங்களே ஆன்லைனில் பார்க்கலாம்!

    நிதி பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வர இந்த புதிய விதுமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய பண முதலீடுகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான முழு செயல்முறையையும் கணகாணிக்கவும் இந்த அப்டேட் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Post Office, Savings

    அடுத்த செய்தி