Home /News /business /

அஞ்சல் நிலையத்தில் உள்ள அக்கவுண்டை முடிக்கிறீர்களா? - இந்த விதியை பின்பற்றுங்கள்!

அஞ்சல் நிலையத்தில் உள்ள அக்கவுண்டை முடிக்கிறீர்களா? - இந்த விதியை பின்பற்றுங்கள்!

போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்

போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்

Post Office accounts : அஞ்சல் நிலையத்தில் அனைத்து திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளும்போது கணக்கு புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தொடர்புடைய அக்கவுண்ட்டில் கடைசியாக வரவு வைக்கப்பட்ட பரிவர்த்தனை குறித்த விவரம் குறிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
அஞ்சல் நிலையங்களில் இருக்கும் எந்தவொரு அக்கவுண்ட் என்றாலும், அது நிறைவுபெறும் சமயத்தில் அல்லது முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு புத்தகத்தை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்று விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

ரெக்கரிங் டெபாசிட் அல்லது டெர்ம் டெபாசிட் அல்லது மாதாந்திர டெபாசிட் திட்டம் அல்லது மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் அல்லது கிசான் விகாஸ் பத்ரா திட்டம் அல்லது தேசிய சேமிப்பு திட்டம் என எந்தத் திட்டத்தின் கணக்கு நிறைவு பெற்றாலும் அல்லது முன்கூட்டியே முடித்துக் கொண்டாலும் இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறையின் சார்பில், கடந்த ஜனவரி 13ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அனைத்து திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளும்போது கணக்கு புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தொடர்புடைய அக்கவுண்ட்டில் கடைசியாக வரவு வைக்கப்பட்ட பரிவர்த்தனை குறித்த விவரம் குறிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் ..  போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? மொபைலில் இந்த நம்பரை முதலில் சேவ் பண்ணுங்க!

அக்கவுண்ட் மூடப்படுவது குறித்த தகவலை சரிபார்த்த பிறகு, கண்காணிப்பாளர் சார்பில், ‘கணக்கு நிறைவு அறிக்கை’ தயார் செய்யப்பட்டு, வாடிக்கையாளருக்கு பிரிண்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை வாடிக்கையாளர் அக்கவுண்ட் ஸ்டேட்மண்ட் வேண்டும் என்று கோரினால், எந்தவித கட்டணமும் வசூல் செய்யாமல், கணக்கு புத்தகத்தை நகல் எடுத்து கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் அக்கவுண்ட்-இல் பான் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், அவர்களது கணக்கில், பரிவர்த்தனைக்கான வரம்பு குறைக்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்..  பிக்ஸடு டெபாசிட்டை விட சிறந்த வருமானம் தரும் 5 போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள்!

அஞ்சல் நிலையத்தில் உங்களுக்கு உள்ள அக்கவுண்ட்-ஐ மூடுவது எப்படி?

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி, அஞ்சல் நிலையத்தில் உள்ள உங்கள் அக்கவுண்ட்-ஐ நீங்கள் முடித்துக் கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/form/Closure.pdf  என்ற இணைய முகவரியில் சென்று, கணக்கை முடித்துக் கொள்வதற்கான படிஎஃப் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும். பின்னர் இந்தப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள உங்கள் பெயர், கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்கு சென்று உங்கள் கணக்கு புத்தகத்துடன் இணைத்து கொடுக்கவும்.

கணக்கு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 266 6868 என்ற இலவச உதவி மையத்தை அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் விளக்கங்களை பெறலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Post Office

அடுத்த செய்தி