ஹோம் /நியூஸ் /வணிகம் /

கலப்படங்களை கட்டுப்படுத்த தீவிரம்... இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய இதை செய்வது அவசியம்!

கலப்படங்களை கட்டுப்படுத்த தீவிரம்... இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய இதை செய்வது அவசியம்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் மற்றும் ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் என்னென்ன?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இனி இந்தியாவிற்கு உணவு பொருள்களை ஏற்றுமதி செய்ய இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்!

  இந்தியாவில் அதிகளவில் கலப்படம் நிறைந்த மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் பிற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கத்தில் சமீபத்தில் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதி ஒன்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

  இதன்படி இனி வெளிநாடுகளிலிந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனவும் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

  உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதி என்ன?

  உணவு பாதுகாப்பு ஒழுங்கு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, பால் மற்றும் பால் பொருள்கள், இறைச்சி மற்றும் இறைச்சி பொருள்கள், முட்டை பவுடர், குழந்தை உணவுகள், ஊட்டச்சத்து உணவுகள் ஆகிய ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த உணவுகளை உற்பத்தி செய்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் எப்எஸ்எஸ்ஐ சான்றிதழ் பெற்றிருப்பதோடு இதனைப் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த புதிய நடைமுறை வருகின்ற பிப்ரவரி 1, 2023 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும்,இதனை அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஒருவேளை இந்தியாவிற்கு குறிப்பிடப்பட்ட உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பின்பற்றாவிடில் இதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே குழந்தை உணவுகள், பால் பொருள்கள் போன்றவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் மற்றும் ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் என்னென்ன? என்பது குறித்த பட்டியலை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.

  இதனையடுத்து உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அதிகாரிகள் வழங்கும் தகவலின் அடிப்படையில், FSSAI ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதியான நிறுவனங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு எவ்வித வாய்ப்புகளும் இனி அமையாது எனவும், இதன் மூலம் மக்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

  Read More: வீட்டு கடன்களுக்கு சலுகைகளை அறிவித்த SBI வங்கி

  எனவே வெளிநாட்டு உணவு உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு இறைச்சி, பால், குழந்தை உணவு உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (FSSAI) பதிவு செய்திருக்கிறோமோ? என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Export, Food