• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஜியோ கஸ்டமர்களுக்கு ஜாக்பாட்! இனி ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசம்

ஜியோ கஸ்டமர்களுக்கு ஜாக்பாட்! இனி ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசம்

ஜியோ

ஜியோ

புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ரூ. 499, ரூ. 666 மற்றும் ரூ. 888 ஆகிய விலைகளில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் ரூ. 401, ரூ.777 மற்றும் ரூ.499 பிளான்களுக்கு பதிலாக புதிய ரூ.549 data add-on pack அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஜியோ அதன் ரூ. 2,599 பிளானையும் புதுப்பித்துள்ளது. புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் செப்டம்பர் 1 முதல் அனைத்து யூசர்களுக்கும் தற்போதுள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மாறுகிறது. உதாரணமாக புதிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆண்டு முழுவதும் ரூ. 499க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பிளான்கள் குறித்து விரிவாக காண்போம்.,

    ரூ. 499 ப்ரீபெய்ட் பிளான் :

    ரூ. 499 விலையில் வழங்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பிளானில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள். கூடுதலாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகல் உள்ளது. இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    ரூ. 666 ப்ரீபெய்ட் பிளான் :

    ரூ. 666 விலையில் வழங்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பிளானில் அன்லிமிடெட் அழைப்புகள் , ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா , தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலை வழங்குகிறது. மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறுவீர்கள். இந்த பிளான் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

    ரூ. 888 ப்ரீபெய்ட் பிளான் :

    இந்த பிளானில் நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

    Also Read : உங்களால் நம்ப முடிகிறதா? ரூ. 50 முதலீடு செய்தாலே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

    ரூ. 2,599 ரீசார்ஜ் பிளான் :

    ரூ. 2,599 ஜியோ ரீசார்ஜ் திட்டம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலுடன் அன்லிமிடெட் குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த பிளான் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

    ரூ.549 data add-on பிளான் :

    ரூ.549 data add-on பிளானை ரீசார்ச் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலை பெறுவீர்கள். இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

    Also Read : ரிடையர்மெண்ட் பணம் கையில் இருக்கா? இந்த திட்டத்தில் போட்டால் கண்டிப்பா லாபம் தான்!

    மேலே குறிப்பிட்டுள்ள புதிய ஜியோ பிளான்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் டிஸ்னி+ ஒரிஜினல்கள், டிஸ்னி, மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியோகிராஃபிக், எச்.பி.ஓ, எஃப்எக்ஸ், ஷோடைம் உள்ளிட்ட அம்சங்களை காண முடியும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: