Home /News /business /

காதல் திருமணம் செய்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு: தமிழ்நாடு அரசு உத்தரவு!

காதல் திருமணம் செய்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு: தமிழ்நாடு அரசு உத்தரவு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காதம் திருமணம் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகாப்புத் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் ரேஷன் கார்டு பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகப்பு துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    தற்போது வழங்கப்பட்டு வரும் இ-ரேஷன் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளில் இணைக்க முடியாது.

    வீட்டில் ஒப்புதல் இல்லாமல் காதல் திருமணம் செய்துக்கொள்பவர்களில் பலர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். வீட்டில் உள்ள ரேஷன் கார்டிலிருந்து பெயரை நீக்க முடியாமலும், பொது விநியோகம் மானியம் நன்மைகள் பெற முடியாமல் இவர்கள் உள்ளனர்.

    எனவே இவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகாப்புத் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    அதன் படி காதல் திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் 100 ரூபாய் மதிப்பிலான ஸ்டாம்ப் பாண்டு பத்திரத்தில் தங்களது பெயரை விட்டில் உள்ள ரேஷன் கார்டுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட அதிகாரியிடம் விண்ணப்பம் ஒன்றைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்குத் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆகும்.

    இப்படிச் செய்வதன் மூலம் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் பெயர் மற்றும் ஆதார் விவரங்கள் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டு புதிய கார்டை பெற முடியும் என்று தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Ration card

    அடுத்த செய்தி